ஏ.ஆர்.ரகுமான் இசை... 3 ஹீரோயின்கள் - விறுவிறுவென தயாராகும் ஜெயம் ரவியின் ரூ.100 கோடி பட்ஜெட் படம்

Published : May 18, 2023, 03:59 PM IST

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் ஜெயம் ரவி ஹீரோவாக நடிக்க உள்ள புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக 3 ஹீரோயின்கள் நடிக்க உள்ளார்களாம்.

PREV
14
ஏ.ஆர்.ரகுமான் இசை... 3 ஹீரோயின்கள் - விறுவிறுவென தயாராகும் ஜெயம் ரவியின் ரூ.100 கோடி பட்ஜெட் படம்

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஜெயம் ரவி. அவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் பொன்னியின் செல்வன் 2. மணிரத்னம் இயக்கிய இப்படத்தில் இராஜ இராஜ சோழனாக நடித்திருந்தார் ஜெயம் ரவி. அவரது கேரக்டருக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது. பொன்னியின் செல்வன் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின்னர் ஜெயம் ரவிக்கு தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.

24

தற்போது நடிகர் ஜெயம் ரவி கைவசம் இறைவன் என்கிற திரைப்படம் உள்ளது. அஹமத் இயக்கியுள்ள இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. இதுதவிர சைரன் என்கிற படத்திலும் நடித்து வருகிறார். அந்தோனி பாக்யராஜ் இயக்கும் இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இதன் ஷூட்டிங் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.

இதையும் படியுங்கள்... watch : மிரள வைக்கும் டாம் குரூஸின் ‘மிஷன் இம்பாசிபிள் - டெட் ரெகானிங் பாகம் 1’ டிரைலர் இதோ

34

இதற்கு அடுத்தபடியாக சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன் போன்ற வெற்றிப்படங்களை இயக்கிய ராஜேஷ் இயக்கத்திலும் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் பிரியங்கா மோகன் ஹீரோயினாக நடிக்கிறார். இதன் ஷூட்டிங்கும் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதையடுத்து அவர் நடிக்க கமிட் ஆகியுள்ள திரைப்படம் தான் ஜீனி. இப்படத்தை இயக்குனர் மிஷ்கினிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய புவனேஷ் அர்ஜுனன் என்பவர் இயக்க உள்ளார்.

44

சுமார் ரூ.100 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகும் இப்படத்தை வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பாக ஐசரி கணேஷ் தயாரித்து உள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார். தற்போதைய லேட்டஸ்ட் அப்டேட்டாக இப்படத்தில் 3 ஹீரோயின்கள் நடிக்க உள்ளார்களாம். அதன்படி தற்போது கீர்த்தி ஷெட்டி, கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் தேர்வாகி உள்ள நிலையில், 3-வது ஹீரோயினுக்கான தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறதாம்.

இதையும் படியுங்கள்... என்ன டிரெஸ்சுடா இது... கேன்ஸ் பட விழாவுக்காக கவர்ச்சி கோதாவில் இறங்கிய எமி ஜாக்சன் - வைரலாகும் ஹாட் கிளிக்ஸ்

Read more Photos on
click me!

Recommended Stories