என்ன டிரெஸ்சுடா இது... கேன்ஸ் பட விழாவுக்காக கவர்ச்சி கோதாவில் இறங்கிய எமி ஜாக்சன் - வைரலாகும் ஹாட் கிளிக்ஸ்

First Published | May 18, 2023, 3:04 PM IST

தமிழ் திரையுலகில் விஜய், ரஜினி போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமான நடிகை எமி ஜாக்சன், கேன்ஸ் பட விழாவில் கவர்ச்சி உடை அணிந்து கலந்துகொண்டார்.

இங்கிலாந்தை சேர்ந்த மாடல் அழகியான எமி ஜாக்சன், கடந்த 2010-ம் ஆண்டு ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வெளியான மதராசப்பட்டினம் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார். அப்படத்தில் வெளிநாட்டுப் பெண்ணாகவே அவர் நடித்திருந்ததால், கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி இருந்தார்.

மதாராசப்பட்டினம் படத்தை அடுத்து ஏ.எல்.விஜய் இயக்கிய மற்றொரு படமான தாண்டவம் படத்தில் ஆக்‌ஷன் ஹீரோயினாக நடித்திருந்தார் எமி. இதையடுத்து நடிகை எமி ஜாக்சன் தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனரான ஷங்கர் இயக்கத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன்படி அவர் இயக்கிய ஐ படத்தில் நடிகர் விக்ரமுக்கு ஜோடியாக நடித்தார் எமி.

Tap to resize

பின்னர் தனுஷுக்கு ஜோடியாக தங்கமகன், விஜய்யுடன் தெறி போன்ற படங்களில் நடித்த எமி ஜாக்சன் தமிழில் கடைசியாக நடித்த பெரிய படம் என்றால் அது சூப்பர்ஸ்டாரின் 2.0. ஷங்கர் இயக்கிய இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடித்து இருந்தார் எமி ஜாக்சன். இப்படம் கடந்த 2018-ம் ஆண்டு வெளியானது.

இதையடுத்து ஜார்ஜ் என்பவருடன் காதல் வயப்பட்ட எமி ஜாக்சன் அவருடன் டேட்டிங் செய்து வந்தார். இந்த ஜோடிக்கு திருமணம் ஆகும் முன்பே ஆண் குழந்தையும் பிறந்தது. இதையடுத்து திருமணம் நிச்சயம் ஆன நிலையில், கடந்த 2019-ம் ஆண்டு அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் இருவரும் பிரிந்துவிட்டனர்.

இதையும் படியுங்கள்... சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை திடீர் என சந்தித்த கிரிக்கெட் வீரர் கபில் தேவ்! வைரலாகும் புகைப்படம்..!

இதையடுத்து எட் வெஸ்ட்விக் என்கிற பிரிட்டிஷ் நடிகருடன் காதலில் விழுந்த எமி ஜாக்சன் அவருடன் தற்போது டேட்டிங் செய்து வருகிறார். மறுபுறம் தமிழ் சினிமாவில் நடிகை எமி ஜாக்சன் ரீ எண்ட்ரி கொடுத்துள்ளார். அதன்படி ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகி இருக்கும் அச்சம் என்பது இல்லையே என்கிற படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார்.

அச்சம் என்பது இல்லையே படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் ஆக்‌ஷன் ஹீரோயினாக நடித்துள்ளார் எமி. முழுக்க முழுக்க லண்டனில் படமாக்கப்பட்டுள்ள இப்படம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது. இதற்காக இறுதிக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், நடிகை எமி ஜாக்சன் பிரான்சில் நடைபெற்று வரும் புகழ்பெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்துகொண்டுள்ளார். அதில் ரெட் கார்பெட்டில் கருப்பு நிற அல்ட்ரா கிளாமர் உடையில் பின்னழகு தெரிய போஸ் கொடுத்தபடி இருக்கும் நடிகை எமி ஜாக்சனின் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன. 

இதைப்பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள் உலக புகழ்பெற்ற விழாவுக்கு இப்படியா உடை அணிந்து வருவது என விமர்சித்து வருகின்றனர். எமி ஜாக்சனின் புகைப்படங்கள் தான் தற்போது சோசியல் மீடியாவில் டிரெண்டாகி வருகின்றன.

இதையும் படியுங்கள்... லிப்லாக் முத்தம்... படுக்கையறை காட்சினு எல்லைமீறிப்போகும் விஜய் டிவி சீரியல்... நெட்டிசன்கள் கடும் எதிர்ப்பு

Latest Videos

click me!