2024 பாராளுமன்றமே.. 2026 தமிழக சட்டமன்றமே! அரசியல் களத்தில் பீதியை கிளப்பிய விஜய் ரசிகர்களின் போஸ்டர்!

First Published | May 18, 2023, 4:22 PM IST

மதுரையைச் சேர்ந்த விஜய் ரசிகர் மன்றத்தை சேர்ந்தவர்கள், வழக்கம்போல் சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாத வகையில் இடம்பெற்ற வசனங்களுடன், விஜய்க்கு பிறந்தநாள் போஸ்டர் ஒட்டி உள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பி உள்ளது.
 

தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவராக இருக்கும் விஜய், சமீப காலமாகவே நடிப்பை தாண்டி... அரசியல் பணிகளிலும் ஆர்வம் காட்டி வருகிறார். குறிப்பாக தன்னுடைய படங்களின் ஆடியோ லாஞ்சில் பலமுறை அரசியலை விமர்சிக்கும் விதமாகவும், சில அரசியல்வாதிகளை வம்பிழுக்கும் விதமாக பேசியது போன்றவை பரபரப்பான ஒன்றாகவே பார்க்கப்பட்டது.
 

தற்போது வரை விஜய் அரசியல் கட்சி துவங்கவில்லை என்றாலும், விரைவில்அரசியல் கட்சி துவங்குவதற்கான அனைத்து பணிகளிலும் தீவிரமாக தீவிரம் காட்டுவதை, மறைமுகமாக அறிவித்து வருகிறார். 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை திடீர் என சந்தித்த கிரிக்கெட் வீரர் கபில் தேவ்! வைரலாகும் புகைப்படம்..!

Tap to resize

இதற்க்கு முன்னோட்டமாக தான் கடந்த ஆண்டு நடந்த, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில்... எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லாமல், விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 169 இடங்களில் போட்டியிட்டனர். அதில் 13 பேர் போட்டி இன்றியும், தேர்வு செய்யப்பட்ட நிலையில் 102 பேர் போட்டியிட்டு வெற்றி வாகை சூடினர். வெற்றி பெற்ற பிரதிநிதிகளை விஜய் நேரில் சந்தித்து வாழ்த்தினார்  என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் விஜய் அரசியலுக்கு வருவதை தெறிப்படுத்தும் விதமாகவே, சமீபத்தில் அம்பேத்கர் பிறந்த நாள் மற்றும் தீரன் சின்னமலை பிறந்த நாளில் அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து கொண்டாடும்படி தன்னுடைய ரசிகர்கள் மன்றத்தை சேர்ந்தவர்களுக்கு உத்தரவு பிறப்பித்திருந்தார். இதை தொடர்ந்து ஒவ்வொரு மாவட்டத்திலும், 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளை நேரில் அழைத்து பிரம்மாண்டமாக பொதுக்கூட்டம் நடத்தி அதில் அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக பரிசு கொடுக்கவும் திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் தற்போது வரை இதுகுறித்து,  எந்த ஒரு அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

கட்டியிருக்கும் சேலையை கழட்டி போட்டு போஸ் கொடுத்த யாஷிகா!
 

இது ஒரு புறம் இருக்க, தளபதியின் பிறந்தநாள் ஜூன் 22 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், மதுரை சேர்ந்த விஜய் ரசிகர் மன்றத்தினர்... ஒட்டி உள்ள போஸ்டர் அரசியலில் மீண்டும் பரபரப்பாக பார்க்கப்பட்டு வருகிறது. மதுரை ரசிகர்கள் ஒட்டி உள்ள போஸ்டரில், "2024 பாராளுமன்றமே... 2026 தமிழக சட்டமன்றமே..." என்ற வசனங்கள் இடம் பெற்றுள்ளது. இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Latest Videos

click me!