தமிழில் விஜய், சூர்யா என முன்னணி நாயகர்களுடன் ஜோடி போட்ட சமந்தா கடந்த 2010-ம் ஆண்டு சினிமா பயணத்தை தொடங்கினார். இவர் தமிழ், தெலுங்கு என பல வெற்றி படங்களில் நடித்து ரசிகர்கள் மனதை கவர்ந்தவர்.
28
samantha
நடிகையை வெற்றி பெற்ற சமந்தா கடந்த 2017-ம் ஆண்டு தெலுங்கு உலகின் சூப்பர் ஸ்டார் நாகார்ஜுனாவின் மகன் நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
38
samantha
படங்களில் பிசியாக வலம் வந்து கொண்டிருந்த சமந்தாவின் திருமணம் விமர்சியாக நடைபெற்றது. பிரபலங்கள் கலந்து கொண்ட இந்த திருமணத்திற்கு பிறகும் சமந்தா படங்களில் கமிட் ஆகி வந்தார். முன்பை விட அவர் நடிப்பில் வேகம் அதிகமாக இருந்து.
மிகவும் மகிழ்ச்சியான இந்த காதல் ஜோடி ஊர் சுற்றும் புகைப்படங்களை அவ்வப்போது பகிர்ந்து வந்ததுடன், திடீர் என தங்களது பிரிவையும் சமூக வலைதளத்தின் வாயிலாக அறிவித்து அதிர்ச்சி ஏற்படுத்தி இருந்தனர்.
58
samantha
பின்னர் இருவரும் அவரவர் கேரியரில் கவனம் செலுத்த துவங்கினர். விவாகரத்துக்கு பின்னர் கவர்ச்சிக்கு தாவிய சமந்தா சமீபத்தில் புஷ்பா படத்தில் ஐட்டம் சாங்கிற்கு ஆட்டம் போட்டு ரசிகர்ளை கவர்ந்திருந்தார்.
68
samantha
இதற்கிடையே சமந்தா - நாகசைதன்யா மீண்டும் இணைய உள்ளதாக தகவல் பரவியது அதோடு ஒரு பேட்டியில் சமந்தா மட்டும் தான் தனக்கு நல்ல பார்ட்னர் என நாகசைதன்யா கூறியிருந்தார்.
78
samantha
அதோடு சமீபத்தில் தனது சமூக வலைதளத்தில் விவாகரத்து குறித்த பதிவை சமந்தா நீக்கியதால், அவர் மீண்டும் நாக சைதன்யாவுடன் இணைய உள்ளதாக தகவல் பரவி வந்தது. ஆனால் சமந்தா தனது திருமண புடவையை நாக சைதன்யாவின் குடும்பத்தினரிடமே மீண்டும் கொடுத்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.
இந்நிலையில் நாகசைதன்யாவை சோசியல் மீடியாவிலிருந்து அன்பாலோ செய்ததோடு அவர் குறித்த அனைத்து புகைப்படங்களையும் தனது சமூக வலைதளப்பாக்கத்தில் இருந்து நீக்கிய சமந்தா, "சில நேரங்களில் ஒரு சிறிய தீப்பொறி இருக்கிறது, அது மிகவும் அமைதியாக பேசுகிறது .... மேலே செல்லுங்கள் ... உங்களுக்கு கிடைக்கும்..." என இன்ஸ்டா ஸ்டோரியில் பதிவு செய்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.