மீரா மிதுன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொழுது பல குற்றசாட்டுகளை முன் வைத்திருந்தார். முன்னதாக அழகி போட்டி நடத்துவதாக நடத்துவதாக ஏமாற்றிய புகாரில் சிக்கி இருந்தார் மீரா மிதுன் . பின்னர் பிக் பாஸுக்குள் நுழைந்த இவர் அங்கு சேரன் மீது பாலியல் சீண்டல் குற்றசாட்டை முன் வைத்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
28
Meera mitun
கிளாமர் அலப்பறையில் மீரா :
வெளியில் வந்த பிறகு கிளாமர் ஆட்டம் போட துவங்கிய மீரா மிதுன் எக்கசக்க ஆட்டம் போட்டு விட்டார். அரை குறை ஆடையுடன் போட்டோக்களை வெளியிடுவதோடு. அண்ணா நண்பர்களுடன் எக்குத்தப்பாக போஸ் கொடுத்து கடுப்பேற்றி இருந்தார்.
38
Meera mitun
வாய் விட்டு மாட்டிக்கொண்ட மீரா மிதுன்:
வெறும் கவர்ச்சியோடு நிறுத்திக்கொள்ளாமல் தனது பாப்புலாரிட்டையை ஏற்ற எண்ணிய மீரா மீதும் கொஞ்சம் ஓவராக சென்று பிற்படுத்தப்பட்டவர்கள் குறித்து மோசமாக பேசி வீடியோ வெளியிட்டார். இதனால் தீயாய் சர்ச்சை வெடித்தது.
பட்டியல் இனத்தவர்கள் குறித்து பேசியதற்கு எதிராக சூப்பர் மாடல் மீரா மீதும் அவரது ஆண் நண்பர் மீதும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வழக்கு பதியப்பட்டது. இதற்கான சம்மனும் அனுப்பப்பட்டது. ஆனால் ஆஜராகாமல் மீரா மிதுன் தலைமறைவானார்.
58
Meera mitun
பிடிபட்ட மீரா மிதுன் :
கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் பதுங்கி இருந்தமீரா மற்றும் அவரது நண்பர் இருவரையும் கடந்த ஆகஸ்ட் 14 ம் தேதி சுற்றிவளைத்த போலீசார் கைது செய்தது. பின்னர் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு, புழல் சிறையில் மீரா மிதுன் அடைக்கப்பட்டார்.
68
Meera mitun
ஜாமீனில் வெளிவந்த மீரா:
புழல் சிறையில் இருந்த மீரா மிதுன் பின்னர் நிபந்தனை ஜாமீனில் வெளியில் வந்தார். பின்னர் அவரது வழக்கமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதில் கவனம் செலுத்தி வந்தார்.
78
Meera mitun
பிடிவாரண்ட் பிறப்பித்த கோர்ட் :
இந்நிலையில் இந்த வழக்கு இன்று (23.3.2022) விசாரணைக்கு வந்தபோது நடிகை மீரா மிதுன் ஆஜராகாததால் பிடிவாரண்ட் பிறப்பித்து மத்திய குற்றப்பிரிவு முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
88
Meera mitun
விரைவில் ஆஜர் படுத்த உத்தரவு:
மேலும் நடிகை மீரா மிதுனை கைது செய்து வரும் ஏப்ரல் 4ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.