படப்பிடிப்புக்காக வெளியேறிய கமல்:
கடந்த 5 சீசன்களையும் தொகுத்து வழங்கி வந்த கமல் மிகவும் சின்சியராக இருந்தார். தேர்தல் நேரம், கொரோனா தொற்று என எந்த காரணத்திற்காகவும் பிக்பாசிலிருந்து அவர் விலகவில்லை . இதையடுத்து அல்டிமேட்டிலும் களமிறங்கினர். ஆனால் இந்நிகழ்ச்சியிலிருந்து விலகிய கமல் படப்பிடிப்பு வேலைகள் இருப்பதால் ஒதுங்குவதாக கூறியிருந்தார். ஆனால் உண்மையில் ஓடிடி பிக்பாஸிற்கு போதிய வரவேற்பு இல்லாத காரணத்தால் தான் கமல் விலகியதாக கூறப்படுகிறது.