விக்னேஷ் சிவன் இயக்கவுள்ள அஜித்தின் 62 வது படத்தில் நடிக்க அஜித் 2 கண்டிஷன் போட்டுள்ளாராம். இதற்கு சம்மதம் தெரிவித்த பிறகே க்ரீன் சிக்னல் காட்டியுள்ளார் அஜித்.
நேர்கொண்ட பார்வையை தொடர்ந்து போனிகபூர், வினோத், அஜித்குமார் கூட்டணியில் உருவான படம் வலிமை. பாதி சண்டை, பாதி செண்டிமெண்ட் என கலவையாக உருவாகி இருந்தது வலிமை. கிட்டத்தட்ட 2 அரை வருட காத்திருப்பிற்கு பிறகு இந்த படம் வெளியானது.
28
Ajith
பட ரிலீஸுக்கு முன்னரே வசூல் வேட்டை :
ரசிகர்களின் நீண்டநாள் எதிர்பார்ப்பாக இருந்து வந்த வலிமை ரிலீஸுக்கு முன்னரே ப்ரிபுக்கிங் மூலம் கோடிக்கணக்கில் வசூல் செய்திருந்தது. படம் வெளியான அடுத்த மூன்று நாட்களுக்கு பெரும்பாலான திரையரங்குகள் ஹவுஸ்புல்லாக இருந்தது. முதல் மூன்று நாள் கணக்குப்படி கிட்டத்தட்ட 100 கோடி வசூல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
38
Ajith
ஹிட் அடித்த அம்மா பாடல் :
வலிமையிலிருந்து இரண்டாவது சிங்குளாக வெளிவந்த அம்மா சென்டிமென்ட் பாடல் வெளியாகி ஹிட் கொடுத்து. இந்த பாடலை விக்னேஷ் சிவன் எழுதியிருந்தார். இந்த பாடலை தனது அம்மாவிற்காக எழுதியிருந்தாகவும் விக்னேஷ்.
48
valimai ajith look
நட்சத்திர பட்டாளம் :
ரொமான்ஸுக்கு இடமில்லாத வலிமையில் அஜித்தின் தோழியாகவும் போலீஸ் அதிகாரியாகவும் காலா பட நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, குக் வித் கோமாளி புகழ் ஆகியோர் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
திரையரங்குகளை தெறிக்கவிட்ட வலிமையில் அஜித் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படம் தற்போது ஓடிடிக்கு செல்ல உள்ளது. 25 நாட்கள் கழித்து வலிமை ஓடிடிக்கு சென்றுள்ளது. வருகிற மார்ச் 25-ந் தேதி இப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டது.
68
Ajith
அஜித்குமார் 61 :
போனிகபூர் தயாரிப்பில் மீண்டும் அஜித் கமிட் ஆகியுள்ளார்.இந்த படத்தையும் எச்.வினோத் இயக்குகிறார். இது குறித்த அஜித்தின் லுக் வெளியாகி இருந்தது. இந்த படத்தில் அஜித் வில்லன் கெட்டப்பில் நடிப்பார் என கூறப்படுகிறது.
78
ajith 62
அஜித்குமார் 62 :
அஜித்குமார் 61 ஸ்டைலில் உலா வரும் அஜித் தந்தது மனைவியுடன் வெளியிட்ட புகைப்படங்கள் ஒருபக்கம் ட்ரெண்டாகி வருகையில், அஜித் 62 வது படத்தின் அப்டேட் வெளியானது. இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளார். லைக்கா தயாரிக்கவுள்ளது. இதில் அனிரூத் இசையமைக்கவுள்ளார் என்கிற அதிகாரப்பூர்வ தகவலும் வெளியானது.
இதையடுத்து அஜித் 62 குறித்த சுவாரஸ்யமான தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. அதன்படி விக்னேஷ் சிவனுக்கு அஜித் போட்ட கண்டிஷன் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. படம் குறித்து அஜித்திடம் பேச சென்ற விக்கியிடம் இந்த படத்தில் அரசியல் சார்ந்த காட்சிகள் கட்டாயம் கூடாது என்றும், சென்டிமென்ட் காட்சிகள் நிச்சயம் வேண்டும் என்றும் அஜித் கூறியுள்ளார். இதற்கு விக்னேஷ் சிவன் ஓகே பிறகே படம் ஒப்பந்தமானதாம்.