சமந்தா சித்தார்த் மற்றும் நாக சைதன்யாவை காதலித்து வந்தார் என்பது அனைவருக்கும் தெரிந்திருந்தாலும், இவர்கள் இருவருக்கு முன்னரே... தன்னுடைய பள்ளி பருவத்தில் இருந்த கிரஷ் குறித்து முதல் முறையாக பகிர்ந்து கொண்டுள்ளார்.
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, தனது வாழ்க்கையில் இரண்டு பேரை காதலித்தாக கூறப்படுகிறது. அதில் ஒருவரான, நடிகர் நாக சைதன்யாவை பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டு, மகிழ்ச்சியாக தன்னுடைய வாழ்க்கையை துவங்கினார்.பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக 2022-ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிய முடிவு செய்தனர்.
27
Samantha Love Naga Chaitanya And Siddharth
நாக சைதயாவை காதலிப்பதற்கு முன், பிரபல நடிகர் சித்தார்த்துடனும் சமந்தா காதல் உறவில் இருந்ததாக கூறப்பட்டது. சில பட நிகழ்ச்சிகளில் இருவரும் ஒன்றாக கலந்து கொண்டு இந்த தகவலை உறுதி செய்த நிலையில், பின்னர் சித்தார்த்தை சமந்தா கழட்டி விட்டதாக கூறப்பட்டது. அதனால் தான் அவர் அடிக்கடி சமந்தாவுக்கு எதிராக பதிவுகளை போட்டார் என்றும் தகவல்கள் பரவின. இருப்பினும், அவர்களின் காதல் கதை எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.
சமந்தாவின் இந்த இரண்டு காதல் கதைகளும் அனைவருக்கும் தெரியும். ஆனால் சமந்தாவின் வாழ்க்கையில் யாருக்கும் தெரியாத மற்றொரு காதல் கதை உள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா? அது அவருடைய பள்ளி பருவ, பப்பி லவ் என சொல்லலாம். தன்னுடைய இந்த முதல் காதலை சமந்தாவே தற்போது வெளிப்படுத்தியுள்ளார்.
47
Samatha about first Crush
சமந்தா இடைநிலை வகுப்பில் படித்து கொண்டிருக்கும் போது, தினமும் பள்ளி முடிந்து வீட்டுக்கு செல்லும் போது ஒரு பையன் இவரை பின் தொடர்வதை வழக்கமாக வைத்திருந்தாராம்.
சுமார் இரண்டு வருடங்கள் அந்த பையன் பின்தொடர்ந்த நிலையில், ஒரு நாள் கூட சமந்தாவிடம் வந்து பேசியது இல்லையாம். ஒருநாள் சமந்தாவே ஏன் என்னை பின்தொடர்ந்து வரீங்க, எதுவும் பேச மாட்ரீங்க என கேட்க, அதற்கு அவர் சொன்ன பதில்.. சமந்தா கற்பனை கூட செய்து பார்த்திராதது. அந்த பையன் "நான் உன்னை பின்தொடர்கிறேன் என்று யார் சொன்னது?` என்று.. கேட்டு சமந்தாவுக்கே ஷாக் கொடுத்தாராம்.
அந்த வார்த்தையைக் கேட்டதும் சமந்தா மனம் நொந்து போய்விட்டாராம். காரணம் அவரைப் பற்றி மனதில் என்னவெல்லாமோ நினைத்திருந்தாராம். ஆனால் அந்த பையனின் பதில் சமந்தாவுக்கு பலத்த ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. அவர் தன்னை விரும்பினாரா? இல்லையா? விரும்பி சொல்ல முடியவில்லையா? என்பது அப்போதைக்கு தனக்கு புரியவில்லை என சமந்தா கூறியுள்ளார். அதே போல் அது ஒரு விசித்திரமான அனுபவம் என்றும், அதே போல் அது ஒரு அழகான நினைவாக தன்னுடைய நினைவில் உள்ளது என சமந்தா தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
67
Samantha Successful Cinema Carrier
சமந்தா மாடலாக தனது வாழ்க்கையைத் தொடங்கி, பின்னர் தெலுங்கு சினிமாவில் ஹீரோயினாக நடித்தார். `ஏ மாயா சேசாவே` படத்தின் மூலம் டோலிவுட்டில் கதாநாயகியாக அறிமுகமாகி, முதல் படத்திலேயே பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்று தெலுங்கில் முன்னணி நடிகையாக உயர்ந்தார். அதன் பிறகு தமிழிலும், விஜய், சூர்யா, தனுஷ், போன்ற பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடி போட்டார்.
நாக சைதன்யா உடனான விவாகரத்துக்கு பின், உடல் அளவிலும் மனதளவிலும் பல பிரச்சனைகளை எதிர்கொண்ட சமந்தா, சமீபத்தில் ஹாலிவுட் வெப் தொடரான `சிட்டாடல்` என்ற வலைத் தொடரில் நடித்தார். இது பெரிய அளவில் வெற்றி பெறவில்லை என்றாலும், தற்போது `மா இன்டி பங்காரம்` என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.