42 வயதிலும், தன்னுடைய அழகாலும், இளமையான லுக்காலும், ரசிகர்களை கவர்ந்து வருபவர் நடிகை ஸ்ரேயா சரண். இவருடைய சிறிய வயது புகைப்படங்கள் தான், தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
நடிகை ஸ்ரேயா ஹரிதுவார், உத்தரகாண்டில் பிறந்தவர். அங்கேயே தன்னுடைய கல்லூரி படிப்பை முடித்த இவர், சினிமா மீது கொண்ட ஆர்வத்தால் திரைப்பட வாய்ப்புகளை தேட துவங்கினார். இவருடைய ஆசைக்கு ஸ்ரேயாவின் பெற்றோரும் உறுதுணையாக இருந்தனர்.
தீவிரமாக ஸ்ரேயா பட வாய்ப்பு தேடி கொண்டிருந்த போது, இவருடைய புகைப்படம் இயக்குனர் விக்ரம் குமார் கையில் கிடைக்க, தான் இயக்கிய 'இஷ்டம்' திரைப்படத்தில் ஸ்ரேயாவை கதாநாயகியாக நடிக்க வைத்தார். இந்த திரைப்படம் 2001-ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து அடுத்தடுத்து, தெலுங்கு திரையுலகில் உள்ள முன்னணி நடிகர்களுக்கு ஜோடி போட துவங்கினார்.