தென்னிந்தியாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகைகளில் நடிகை சமந்தாவும் ஒருவர். தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் வெற்றிகரமான நடிகையாக சமந்தா வலம் வருகிறார். விண்ணை தாண்டி வருவாயா படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான அவர் தொடர்ந்து தமிழ், தெலுங்கில் பிசியான நடிகையாக மாறினார்.
நான் ஈ, கத்தி, தெறி, மெர்சல், நீதானே என் வசந்தம், இரும்புத்திரை பல ஹிட் படங்களில் நடித்த சமந்தா தெலுங்கிலும் பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். ஈகா, ரங்கஸ்தலம், ஜனதா கேரேஜ், மனம் போன்ற படங்களை உதாரணமாக சொல்லலாம். சமந்தா நடிப்பில் கடைசியாக குஷி படம் வெளியானது. எனினும் இந்த படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.