நாக சைதன்யாவுக்காக போட்ட டாட்டூ; விவாகரத்தாகி 4 ஆண்டுகளுக்கு பின் நீக்கிய சமந்தா

Published : Jun 07, 2025, 03:03 PM IST

நடிகர் நாக சைதன்யாவை காதலிக்கும் போது தன் முதுகில் போட்டுக் கொண்ட டாட்டூவை நடிகை சமந்தா தற்போது நீக்கி இருக்கிறார்.

PREV
15
Samantha removes YMC Tattoo

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த சமந்தா, தற்போது பான்-இந்தியா நட்சத்திரமாக உயர்ந்துள்ளார். புஷ்பா படத்தின் 'ஊ சொல்றியா மாமா' பாடலுக்கு அல்லு அர்ஜுன் உடன் சேர்ந்து அவர் ஆடிய அசத்தலான நடனம் அவருக்கு ஏராளமான ரசிகர்களைப் பெற்றுத் தந்தது. இந்நிலையில், நடிகை சமந்தா தனது முதுகில் குத்தி இருந்த YMC டாட்டூவை நீக்கியுள்ளார்.

25
சமந்தாவின் டாட்டூ

நடிகர் நாக சைதன்யாவுடன் விவாகரத்தாகி நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, சமந்தா ரூத் பிரபு தனது முதுகில் குத்தி இருந்த 'யே மாய சேசாவே' (YMC) டாட்டூவை நீக்கியுள்ளார். இந்தப் படத்தில் நாக சைதன்யாவோடு நடித்தபோதுதான் இவர்கள் இருவருக்கும் காதல் மலர்ந்தது. அதன் நினைவாகவே தன் முதுகில் YMC என டாட்டூ குத்திக் கொண்டார் சமந்தா.

35
சமந்தா விவாகரத்து

பல ஆண்டுகள் காதலித்த பிறகு, 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட சமந்தாவும் நாக சைதன்யாவும் 2021ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். நாக சைதன்யாவிடமிருந்து பிரிந்து நான்கு ஆண்டுகள் ஆகின்றன. இந்தக் காலகட்டத்தில், அவர் தனது காதல் சின்னமாக YMC டாட்டூவை வைத்திருந்தார். ஆனால் தற்போது டாட்டூவை நீக்கியதன் மூலம் அவர் பழைய நினைவுகளை மறந்துவிட்டு வாழ்க்கையில் முன்னேறிச் செல்கிறார் என்பது போல் தெரிகிறது. அவரது ரசிகர்களும் இதேபோல் கருத்து தெரிவித்துள்ளனர்.

45
சமந்தாவின் அதிரடி முடிவு

அதுமட்டுமின்றி நடிகை சமந்தா தனது நிச்சயதார்த்த மோதிரம் மற்றும் திருமண ஆடையை முழுவதுமாக மாற்றியமைத்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு, பிரபல நகை வடிவமைப்பாளர் திருமித் மேருலியா, சமந்தா தனது 3-காரட் வைர மோதிரத்தை பதக்கமாக மாற்றியதாகக் கூறினார். அதேபோல் தனது திருமண ஆடையை கருப்பு நிற ஆடையாக மாற்றியமைத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

55
சமந்தாவின் அடுத்த காதல்?

நடிகை சமந்தா விரைவில் இரண்டாவது திருமணம் செய்துகொள்ள உள்ளதாகவும் பேச்சு அடிபடுகிறது. அவர் இயக்குனர் ராஜ் நிதிமோருவை காதலிப்பதாகவும், இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் பரவலாக செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளனர். இந்த செய்திக்கு இருவருமே எந்தவித மறுப்பும் தெரிவிக்காமல் மெளனம் காத்து வருகின்றனர்.

Read more Photos on
click me!

Recommended Stories