தமிழ் சினிமாவில் விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன், என அடுத்தடுத்து டாப் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து, முன்னணி நடிகைகளின் பட்டியலில் இடம் பிடித்தவர் சமந்தா. திருமணத்திற்கு பின்பும், திரை உலகில் கவனம் செலுத்தி வந்த சமந்தா அன்பான மனைவியாகவும், பொறுப்பான மருமகளாகவும் நடந்து கொண்டு திரை உலகைச் சேர்ந்த பலரையும் வியக்க வைத்தார்.