உடல் எடையை ஏற்றுவதும், குறைப்பதும் எவ்வளவு எளிதான காரியம் அல்ல. அந்த வகையில் சுமார் 108 கிலோ எடை கூடி காணப்பட்ட சிம்பு, பின்னர் தான் நடித்த மாநாடு, மற்றும் வெந்து தணிந்தது காடு ஆகிய படங்களுக்காக சுமார் 30தில் இருந்து 40 கிலோ எடை வரை அசால்டாக குறைத்தார்.
மீண்டும் 'பத்து தல' படத்திற்காக தாறு மாறாக உடல் எடையை ஏற்றி நடித்துள்ளார். மேலும் படம் முடிந்த கையேடு... அசால்டாக பல்வேறு உடல்பயிற்சி மற்றும் டயட் இருந்து கூட்டிய எடையை குறைத்துள்ளார் சிம்பு. இதுகுறித்து சமீபத்தில் நடந்த பத்து தல ஆடியோ லாஞ்சில் தெரிவித்திருந்தார்.
மிகவும் எதிர்பாக்க கூடிய படமாக உள்ள 'பத்து தல' படத்தில் தனுஷ் செம்ம கெத்தான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் மார்ச் 30 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், இந்த படத்தை சில்லுனு ஒரு காதல் கிருஷ்ணா இயக்கியுள்ளார். இப்படத்தில் முக்கிய வேடத்தில் கௌதம் கார்த்திக்கும் அவருக்கு ஜோடியாக ப்ரியா பவானி ஷங்கரும் நடித்துள்ளார். இப்படம் கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் நடிப்பில் வெளியான முஃட்டி படத்தின் ரீமேக்காக எடுக்கப்பட்டுள்ளது.
5 லட்சம் தரேன் அந்த இடத்தை காட்டு.. கேன்சரால் அவதிப்படும் 'அங்காடி தெரு' சிந்துவுடம் கொச்சையாக பேசிய நபர்!
நேரம் கிடைக்கும் போதெல்லாம், சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து வரும் சிம்புவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சில வெளியாகியுள்ளது. இதில் 20 வயது இளம் காளையாக, சிம்பு செம்ம ஸ்டைலிஷாக இருக்கிறார். இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பார்க்கப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது.