மிக குறுகிய காலத்தில் ரசிகர்கள் மனதை கவர்ந்து விட்ட நடிகை ராஷ்மிகா மந்தனா, தமிழ், தெலுங்கு, ஹிந்தி, என தென்னிந்திய மொழிகளில் ரவுண்டு கட்டி நடித்து வருகிறார்.
ரசிகர்கள் மனதை கவர்ந்த நேஷ்னல் கிரிஷ்ஷாக இருக்கும், ராஷ்மிகா மந்தானா... நேற்று புதிதாக தெலுங்கில் நடிக்க உள்ள படத்தின் பட பூஜைக்காக, மும்பையில் இருந்து ஹைதராபாத்துக்கு வந்தார்.
நிதினுக்கு ஜோடியாக ராஷ்மிகா நடிக்க உள்ள இந்த படத்தை, வெங்கி குடுமுலா இயக்குகிறார். மைத்திரேயி மூவிஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு சிரஞ்சீவி கிளப் அடித்து துவங்கி வைத்தார்.
மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் துவங்க உள்ள படத்தின் படப்பிடிப்பு விழாவில்... எடுக்க பட்ட புகைப்படங்கள் ஒருபக்கம் வைரலாக நிலையில்... ராஷ்மிகாவின் ஏர்போர்ட் புகைப்படமும் படு வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.