சினிமாவில் அட்ஜஸ்ட்மெட் பிரச்சனை இருக்கு..! தன்னுடைய அனுபவம் குறித்து பேசிய பிரியா பவானி ஷங்கர்..!

First Published | Mar 25, 2023, 9:13 AM IST

நடிகை பிரியா பவானி ஷங்கர், முதல் முறையாக சினிமாவில் நடக்கும் அட்ஜஸ்ட்மென்ட் குறித்து பேசி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
 

தனியார் தொலைக்காட்சியில், ஒரு செய்தி வாசிப்பாளராக தன்னுடைய பணியை துவங்கிய பிரியா பவானி ஷங்கர், பின்னர் சீரியல் ஹீரோயினாக மாறியவர். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற, 'கல்யாண முதல் காதல் வரை' சீரியலில் அமித் பார்கவுக்கு ஜோடியாக நடித்தார்.
 

இந்த சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் அதிகம் ரசிக்கப்பட்டதோடு, பட்டி... தொட்டி எங்கும் இவருக்கென தனி ரசிகர்கள் கூட்டமும் உருவானது. இதுவே இவருக்கு  வெள்ளித்திரை வாய்ப்புகளை பெற்றுத்தந்தது.

அல்ட்ரா மாடர்ன் உடையில்... பட்டனை கழட்டி விட்டு ஹாலிவுட் ஹீரோயின் போல் போஸ் கொடுத்த சமந்தா! வேற லெவல் போட்டோஸ
 

Tap to resize

அந்த வகையில் கடந்த 2017 ஆம் ஆண்டு, இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில் வெளியான, 'மேயாத மான் திரைப்படத்தின்' மூலம் ஹீரோயினாக அறிமுகமான பிரியா பவானி ஷங்கர்,  இந்த படத்தில் வைபவுக்கு ஜோடியாக நடித்தார். இந்த படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தயாரித்திருந்தார். 

சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் மிகப்பெரிய லாபத்தை பெற்று கொடுத்ததோடு, பிரியா பவானி ஷங்கரை வெற்றிப்பட நாயகியாகவும் மாற்றியது. எனவே இந்தப் படத்தை தொடர்ந்து, அடுத்தடுத்த பல படங்களில் நடிப்பதில் பிஸியானார் பிரியா பவானி ஷங்கர். இந்த படத்தை தொடர்ந்து, இவர் நடித்த கடைக்குட்டி சிங்கம், ஓ மனப்பெண்ணே, ஹாஸ்டல், கசட தபர போன்ற படங்கள் முதலுக்கு மோசம் இல்லாமல் வெற்றி பெற்றது.

கதறி அழுத அம்மாவை... கண்ணீரோடு கட்டிப்பிடித்து தேற்றிய அஜித்! மனதை ரணமாக்கிய வீடியோ!

மேலும் கடந்த ஆண்டு இவர் தனுஷுடன்  நடித்த திருச்சிற்றம்பலம், அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்த யானை, போன்ற படங்கள் சூப்பர் ஹிட் வெற்றி பெற்று. தற்போது  முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறியுள்ள ப்ரியா பவானி ஷங்கர், ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்த அகிலன் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் ராகவா லாரன்சுக்கு ஜோடியாக ருத்ரன், அருள்நிதிக்கு ஜோடியாக டிமான்டி காலனி 2, போன்ற படங்களில் பிசியாக நடித்து வரும் பிரியா பவானி ஷங்கர், தமிழைத் தொடர்ந்து தெலுங்கிலும் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

ஒருவேளை சாப்பாட்டுக்கு கூட வழியில்லாமல்.. பிச்சை எடுக்கும் ஷங்கரின் உதவி இயக்குனர்! கண்டுகொள்ளாத திரையுலகம்!  

இந்நிலையில் முதல் முறையாக சினிமாவில் நடக்கும் அட்ஜஸ்மெண்ட் குறித்தும், தன்னுடைய அனுபவம் குறித்தும் பகிர்ந்து கொண்டுள்ளார். சமீபத்தில் இவர் கலந்து கொண்ட பேட்டி ஒன்றில் தொகுப்பாளர் சினிமாவில் நடக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை குறித்து கேள்வி எழுப்பி உள்ளார். அதற்கு பதில் அளித்த பிரியா பவானி ஷங்கர், தற்போது வரை தன்னிடம் யாரும் தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்வதில்லை. எனக்கு பல நண்பர்கள் திரைத்துறையில் இருக்கின்றனர். ஆனாலும் அந்த மாதிரி நடந்ததில்லை என தன்னுடைய அனுபவம் குறித்து பகிர்ந்து கொண்ட பின்னர், அதே நேரம் சினிமாவில் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இருக்கிறது. நான் இல்லை என்று சொல்லவில்லை என கூறியுள்ளார்.

Latest Videos

click me!