அட்ராசக்க... ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நகை திருட்டு வழக்கில் மூன்றாவது நபர் அதிரடி கைது!

First Published Mar 24, 2023, 4:43 PM IST

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவின் நகை திருட்டு வழக்கில் ஏற்கனவே இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மூன்றாவதாக ஒரு நபர்... கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், கடந்த மாதம் தன்னுடைய நகை லாக்கரில் வைக்கப்பட்டிருந்த 60 சவரன் நகை திருடப்பட்டதாக தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததாக, கடந்த சில நாட்களுக்கு முன் வெளியான தகவல் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் தொடர்பாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கொடுத்த புகார் மனுவில், மிகவும் முக்கியமான குடும்ப விஷேசத்துகளுக்கு மட்டுமே மிகவும் பெரிய தங்கம் மற்றும் வைர நகைகளை அணிவதால், கடந்த மூன்று வருடங்களாக நகை லாக்கரை திறந்து பார்க்கவில்லை என தெரிவித்திருந்தார். மேலும் இந்த லாக்கரில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய மகள் திருமணத்திற்கு போட்ட தங்கம் மற்றும் வைர நகைகள் இருந்ததோடு மட்டுமின்றி, ஐஸ்வர்யா ரஜினிகாந்த்க்கு அவருடைய நண்பர்கள் அன்பளிப்பாக கொடுத்த சில தங்க நகைகளும் இருந்ததாக கூறப்படுகிறது. எனவே தற்போது வரை சரியாக எவ்வளவு நகை இருந்தது என்பது அவருக்கே தெரியவில்லை என கூறப்படுகிறது.

#Breaking மூலையில் ரத்த கசிவு... கோமா நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாம்பே ஜெயஸ்ரீ!

அதேபோல் இந்த திருட்டு சம்பவத்தில், தன்னுடைய வேலைக்காரர்கள் மூன்று பேர் மீது சந்தேகம் உள்ளதாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார். காரணம், அவர்கள் மூன்று பேருக்கு மட்டுமே தன்னுடைய நகை லாக்கரின் சாவி எங்கிருக்கிறது என்பது தெரியும் என்றும், தன்னுடைய நகை லாக்கர் உடைக்கப்படாமல் சாவி போட்டு நகை திருடப்பட்டு... பின்னர் எந்த இடத்தில் சாவி இருக்குமோ அதே இடத்தில் வைக்கப்பட்டிருந்ததால், இதனை ஐஸ்வர்யா ரஜினிகாந்த்க்கு மிகவும் நெருக்கமானவர் யாரோ தான் செய்திருப்பார் என்பதை உறுதிப்படுத்தினர் போலீசார்.

முதல் கட்டமாக வீட்டு வேலைக்காரர்களிடம் விசாரணையை துவங்கின பின்னர், இந்த நகை திருட்டு சம்பவத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டில் பல ஆண்டுகளாக வேலை செய்து வந்த ஈஸ்வரி என்பவரும், அவருக்கு உறுதுணையாக வெங்கடேசன் என்கிற டிரைவரும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் ஐஸ்வர்யா நகையை திருடிய பணத்தில், சுமார் ஒரு கோடி ரூபாய்க்கு கடன் பெற்று வீடு வாங்கியதும்... தன்னுடைய மகளுக்கு நிறைய சீர் செய்து திருமணம் செய்து வைத்தது மட்டும் இன்றி, கணவருக்கு காய்கறி அங்காடி ஒன்றை வைத்து கொடுத்ததும் தெரியவந்தது.

தந்தையின் சடலம் பக்கத்தில் சோகத்துடன் நின்று... வேண்டாம் என கையெடுத்து கும்பிட்டு அஜித்!
 

பின்னர் போலீசார் ஈஸ்வரி (46)  என்பவரை கைது செய்த பின்னர், அவருக்கு உறுதுணையாக இருந்த வெங்கடேசன் (44) என்பவரையும் கைது செய்தனர். இவர்கள் இவரிடமிருந்தும், இதுவரை 100 பவுன்ஸ் தங்க நகைகள், 30 கிராம் வைர நகைகள்.. 4 கிலோ வெள்ளி பொருட்கள் பரிமுதல் செய்யப்பட்டுள்ளது. 60 பவுன் நகை மட்டுமே தொலைந்து போனதாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தெரிவித்திருந்த நிலையில், 100 பவுன் நகை மீட்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது. அது மட்டும் இன்றி, தற்போது மூன்றாவது நபர் ஒருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இதுபோன்ற திருட்டு நகைகளை வாங்கியதாக மயிலாப்பூர் சேர்ந்த வினால்க் சங்கர் நவாலி என்பவரை தேனாம்பேட்டை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

click me!