தந்தையின் சடலம் பக்கத்தில் சோகத்துடன் நின்று... வேண்டாம் என கையெடுத்து கும்பிட்டு அஜித்!

First Published | Mar 24, 2023, 1:27 PM IST

நடிகர் அஜித் தன்னுடைய தந்தை சடலத்தின் பக்கத்தில் சோகமாக நின்று கொண்டு, தன்னை சுற்றி நின்று புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தவர்களை பார்த்து வேணாம் என கையெடுத்து கும்பிட்டு வேண்டுகோள் வைத்துள்ளார். 
 

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக இருக்கும் அஜித்தின் தந்தை கடந்த 2019 ஆம் ஆண்டு உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. மேலும் அப்போது அவருக்கு சிகிச்சை அளித்து மருத்துவர்கள் உயிரை காப்பாற்றிய போதிலும், அஜித்தின் தந்தை சுப்பிரமணி பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து தன்னுடைய வீட்டிலேயே தந்தைக்கு தேவையான மருத்துவ உபகரணங்கள், கொண்டுவர செய்து அவரை கவனித்துக் கொள்ள... செவிலியர் மற்றும் அடிக்கடி வந்து பார்த்துச் செல்லும் வகையில் மருத்துவரையும் நியமித்தார்.
 

அஜித் தன்னுடைய தந்தைக்கு எந்த விதத்திலும் குறைவில்லாத வகையில் கவனித்துக் கொண்டார். இந்நிலையில் 85 வயதாகும் அஜித்தின் தந்தை இன்று அதிகாலை தூக்கத்திலேயே உயிர் நீத்த நிலையில், இந்த தகவல் வெளியாகி அவருடைய ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் பலர் சமூக வலைதள மூலமாக அஜித்துக்கு தங்களுடைய ஆறுதலை தெரிவித்து, அவரின் தந்தை பி ச.ப்பிரமணியம் அவர்களுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஏ.ஆர்.ரஹ்மானின் கிடாரிஸ்ட் ஸ்டீவ் வாட்ஸ் அதிர்ச்சி மரணம்..!
 

Tap to resize

அதேபோல் அஜித்துக்கு நெருக்கமான பலர் போன் மூலமாக தங்களுடைய வருத்தத்தை தெரிவிக்க முற்பட்டனர். ஆனால் தற்போதைய சூழ்நிலை காரணமாக அஜித்தின் தரப்பில் இருந்து எந்த ஒரு போன் காலையும் எடுக்க முடியவில்லை. குறிப்பிட்ட சில பிரபலங்கள் மற்றும் குடும்பத்தினர் மட்டுமே அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்பட்டனர்.
 

அதேபோல் தன்னுடைய தந்தையின் இறப்பை குடும்பத்தினரோடு, தனிப்பட்ட முறையில் அனுசரிக்கவே விரும்புவதாகவும் அஜித் அறிக்கை மூலம் தெரிவித்திருந்தார். மேலும் சரியாக அஜித்தின் தந்தை உடல், இன்று நண்பகல் 12:15 மணிக்கு,பெசன்ட் நகர் மின் மயானத்தில், அவருடைய குடும்ப வழக்கப்படி தகனம் செய்யப்பட்டது. அப்போது அஜித் தன்னுடைய தந்தையின் உடலை மயானத்தின் உள்ளே கொண்டு செல்ல முற்பட்ட போது, ரசிகர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் சூழ்ந்து கொண்டு வீடியோ மற்றும் புகைப்படம் எடுக்க முயன்றனர்.

நடிகர் மகேஷ் பாபுவின் 10 வயது மகளா இது? பாவாடை தாவணியில் ஜொலிக்கும் சித்தாரா..! யுகாதி ஸ்பெஷல் போட்டோ ஷூட்!

அப்போது அஜித், தந்தை பக்கத்தில் மிகவும் சோகமாக நின்றபடி, கையெடுத்து கும்பிட்டு வேண்டாம் என கூறி கோரிக்கை வைத்தார். அஜித்தின் வேண்டுகோளை ஏற்று கொண்டு சிலர் கலைந்து சென்றாலும்... சிலர் இதுபோன்ற சயமயத்தில் கூட சுதந்திரம் கொடுக்காமல் நடந்து கொண்டு பின்தொடர்ந்து சென்றனர்... பின்னர் அஜித்தின் தந்தையின் உடல் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

Latest Videos

click me!