தந்தை மீது அதீத பாசம் கொண்டிருந்த அஜித்... அவருடன் எடுத்துக்கொண்ட அரிய புகைப்படங்கள் இதோ

Published : Mar 24, 2023, 11:37 AM IST

நடிகர் அஜித்தின் தந்தை சுப்ரமணியம் இன்று காலை காலமானார். அவர் தனது மகன் அஜித் உடன் எடுத்துக் கொண்ட அரிய புகைப்படங்களின் தொகுப்பு இதோ.

PREV
18
தந்தை மீது அதீத பாசம் கொண்டிருந்த அஜித்... அவருடன் எடுத்துக்கொண்ட அரிய புகைப்படங்கள் இதோ

நடிகர் அஜித்திற்கு கடந்த 2000-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அவர் நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் கலந்துகொண்டார். அப்போது அவர்களுடன் சேர்ந்து நடிகர் அஜித்தின் தந்தை பி சுப்ரமணியம் எடுத்துக்கொண்ட புகைப்படம் இது.

28

நடிகர் அஜித்தின் தந்தை பி சுப்ரமணியம் தனது மனைவி மோகினி மற்றும் மகன்களுடன் எடுத்துக்கொண்ட அரிய புகைப்படம் இது. மோகினியும், சுப்ரமணியும் காதலித்து திருமணம் செய்துகொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

38

வேதாளம் படத்தில் நடித்த சமயத்தில் நடிகர் அஜித் தனது தந்தையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தான் இது. இதில் சுப்ரமணியம் தனது மனைவி மீதும் மகன் மீது கைபோட்டுக் கொண்டு செம்ம ஸ்டைலாக போஸ் கொடுத்துள்ளார்.

48

நடிகர் அஜித் தனது தாய் மோகினி மற்றும் தந்தை சுப்ரமணியத்துடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்திருந்தார். அப்போது கோவில் வளாகத்தில் எடுத்த புகைப்படம் இது.

இதையும் படியுங்கள்... தந்தைக்கு என்ன ஆச்சு... திடீரென மரணமடைந்தது எப்படி? நடிகர் அஜித் வெளியிட்ட உருக்கமான அறிக்கை

58

நடிகர் அஜித் தன் தந்தை மீது மிகுந்த பாசம் கொண்டவர். அவரது தோள்மீது கைபோட்டுக்கொண்டு ஆனந்த புன்னகையுடன் நடிகர் அஜித் எடுத்துக்கொண்ட அரிய புகைப்படம் தான் இது.

68

சுப்ரமணியமும் அவரது மனைவி மோகினியும் நடிகர் அஜித்தின் அன்பான ரசிகர்களுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் தான் இது.

78

அஜித்தின் தந்தை சுப்ரமணியம் தனது மருமகள் ஷாலினி மற்றும் மகனுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் இது. நடிகர் அஜித் கவுதம் மேனன் இயக்கிய என்னை அறிந்தால் படத்தில் நடித்துவந்தபோது எடுத்த புகைப்படம் தான் இது.

88

அஜித்தின் தந்தை சுப்ரமணியம் இன்று அதிகாலை காலமானார். தூக்கத்திலேயே அவரது உயிர் பிரிந்தது கடந்த 4 ஆண்டுகளாக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு இருந்த சுப்ரமணியம், அதற்காக சிகிச்சையும் பெற்று வந்துள்ளார்.  
 
இதையும் படியுங்கள்... மு.க.ஸ்டாலின் முதல் எடப்பாடி வரை... அஜித்தின் தந்தை மறைவுக்கு சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் இரங்கல்

click me!

Recommended Stories