தமிழ் சினிமாவில், கடந்த 20 வருடங்களுக்கு மேலாக குணச்சித்திர வேடத்திலும், வில்லியாகவும் நடித்து பிரபலமானவர் 'அங்காடித்தெரு' சிந்து. இவர் எத்தனையோ படங்களில் நடித்திருந்தாலும், அங்காடித்தெரு படம் இவருக்கு, நல்ல பிரபலத்தை ஏற்படுத்திக் கொடுத்ததால், பின்னர் ரசிகர்களாலும்.. திரையுலகினராலும்.. அங்காடி தெரு, சிந்து என்றே அழைக்கப்பட்டார்.
கொரோனா நேரத்தில் சரியான சிகிச்சை எடுக்க முடியாமல் தவித்த சிந்து, இதற்கான சிகிச்சை எடுத்துக்கொண்டார். அப்போது மார்பகத்தில், அதிகமாக புற்றுநோய் பரவி இதன் காரணமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இவரின் மகருமகன், இளம் வயதிலேயே ஹார்ட் அட்டாக் காரணமாக உயிரிழந்து விட்ட நிலையில், தன்னுடைய மகள் மற்றும் பேரக்குழந்தையையும் சிந்து தான் காப்பாற்றி வருகிறார். சிந்துவின் நிலையை, அறிந்து கோவை சரளா, மனோபாலா, ராகவா லாரன்ஸ், போன்ற பலர் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர்.
புற்றுநோய் மேலும் பரவும் நிலையில் உள்ளதால், தொடர்ந்து தன்னுடைய சிகிச்சையை மேற்கொள்ள பணம் வேண்டுமென மிகவும் உருக்கமாக சில வீடியோக்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில் சிந்துவுக்கு ஒருவர் அனுசரணையாக பேசி விசாரித்துள்ளார். பின்னர் வீடியோ காலில் வர சொல்லியுள்ளார். இதற்கு சிந்து ஏன் என கேட்டபோது, ஒரு பக்க மார்பகத்தில்தானே உனக்கு கேன்சர் கட்டி இருக்கிறது. இன்னொரு பக்க மார்பகத்தை காட்டு ஐந்து லட்சம் தருகிறேன் என மிகவும் கொச்சியாக பேசி பேசியதாக கண்ணீரோடு பேட்டி ஒன்று சிந்து கூறியுள்ளார்.
சினிமாவில் அட்ஜஸ்ட்மெட் பிரச்சனை இருக்கு..! தன்னுடைய அனுபவம் குறித்து பேசிய பிரியா பவானி ஷங்கர்..!