இயக்குனர் மணிரத்தினத்தின் கனவு படமாக உருவானது 'பொன்னியின் செல்வன்'. பல ஜாம்பவான்கள் கல்கியின் கைவண்ணத்தில் எழுதப்பட்ட, பொன்னியின் செல்வன் நாவலை படமாக எடுக்க முற்பட்ட நிலையில், பல்வேறு பிரச்சனைகள் காரணமாக இந்த சரித்திர வரலாற்றை யாராலும் எளிதில் திரைப்படமாக முடியவில்லை.
இந்நிலையில் லைகாவின் தயாரிப்பில் பல்வேறு சவால்களை கடந்து, இப்படத்தை இரண்டு பாகங்களாக இயக்கி முடித்தார் இயக்குனர் மணிரத்னம். இந்த படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியானது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம், என ஐந்து மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக வெளியான இப்படத்திற்கு... ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும் ஒட்டுமொத்தமாக இப்படத்தின் இரண்டு பாகத்தையும் இயக்க இயக்குனர் மணிரத்தினம் 500 கோடி பட்ஜெட் செலவு செய்த நிலையில், முதல் பாகமே இந்த 500 கோடியை பெற்று தந்தது.
சிம்புவுக்கு 40 வயசுனு சொன்ன யார் நம்புவா? 20 வயது யங் ஹீரோவை போல் ஸ்டைலிஷ் லுக்கில் கெத்து காட்டிய போட்டோஸ்!
இந்நிலையில் அடுத்த மாதம் ஏப்ரல் 28ஆம் தேதி 'பொன்னியின் செல்வன் 2' திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. முதல் பாகத்தில் ஒரு சில குறைகள் இருந்தாலும், இப்படத்தை நேர்த்தியாக இயக்கி இருந்தார் மணிரத்னம். மேலும் இரண்டாவது பாகத்தை அவர் எப்படி இயக்கி இருப்பார்? என்பதை தெரிந்து கொள்ள பலரும் ஆர்வமாக உள்ளனர்.
இதே நாளில், பொன்னியின் செல்வன் ட்ரைலரையும் படக்குழு வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளது. ஏ ஆர் ரகுமான் இசையில், பொன்னியின் செல்வன் முதல் பாகத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவை. அதே போல் 'பொன்னியின் செல்வன் 2' படத்தில் இருந்து சமீபத்தில் வெளியான 'அக நக' பாடல் ஒரே நாளில் ஐந்து மில்லியன் ரசிகர்களால் பார்க்கப்பட்டு சாதனை படைத்தது.