டோலிவுட் திரை உலகில் முன்னணி நடிகராக இருக்கும், நாகர்ஜூனாவின் மூத்த மகன் நாக சைதன்யா, தற்போது வளர்ந்து வரும் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். இவர் தெலுங்கில் நடிகை சமந்தா ஹீரோயினாக அறிமுகமான Ye Maaya Chesave படத்தில் நடித்த போது, இருவருக்கும் ஏற்பட்ட நட்பு, பின்னர் காதலாக மாறியது. இதை தொடர்ந்து சுமார் 7 வருடங்கள் காதலித்து, பெற்றோர் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.