தமிழ் சினிமாவில், எம்.ஜி.ஆர், சிவாஜி, போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து மிகவும் பிரபலமானவர், மறைந்த பழம்பெரும் நடிகை மஞ்சுளா. 1970 ஆம் ஆண்டு நடிகர் ஜெமினி கணேசன் நடித்த 'சாந்தி நிலையம்' படத்தின் மூலம் அறிமுகமான இவர், தன்னுடைய இரண்டாவது தமிழ் படத்திலேயே எம்.ஜி.ஆர் நடித்த 'ரிக்ஷகாரன்' படத்தின் கதாநாயகியாக மாறினார்.