தமிழ் சினிமாவில், முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர் வைகைப்புயல் வடிவேலு. இவரின் போதாத காலம், நடித்தால் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என கூறியதால்... தமிழ் சினிமாவில் தொடர்ந்து சரிவை சந்திக்க நேர்ந்தது. இதையடுத்து, இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில் இவர் நடிக்க இருந்த '24 ஆம் புலிகேசி' திரைப்படத்திற்காக பல்வேறு பிரச்சனைகளில் சிக்கினார்.
பல வருட போராட்டத்திற்கு பின்னர், சமீபத்தில் இவருக்கு போடப்பட்ட ரெட் கார்டு நீக்கப்பட்டதை தொடர்ந்து, சில படங்களில் காமெடி கதாபாத்திரத்திலும், தலைநகரம் பட இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' என்ற படத்தில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். இவருடன் இணைந்து இந்த படத்தில் பிக்பாஸ் பிரபலமான ஷிவானி, குக் வித் கோமாளி சிவாங்கி, உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.
லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ள இந்த படத்திற்கு, இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். முழுக்க முழுக்க காமெடி கதையாம்சம் கொண்ட இந்த படத்தில் இருந்து சமீபத்தில் அப்பத்தா என்கிற முதல் சிங்கிள் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், விரைவில் இந்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என படக்குழு தெரிவித்திருந்தது.
Kayal Serial: 'கயல்' சீரியலில் இருந்து விலகிய முக்கிய பிரபலம்! யார் தெரியுமா..?