Ivana Photos: பட்டு சேலை அழகில்... ரசிகர்களை பாடாய் படுத்தும் 'லவ் டுடே' நாயகி இவனா! ரீசென்ட் போட்டோஸ்..!

First Published | Nov 25, 2022, 8:40 PM IST

'லவ் டுடே' படத்தின் மூலம் வெற்றி பட நாயகியாக அறியப்பட்டுள்ள, இவானாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
 

மிக குறுகிய காலத்தில், ரசிகர்கள் மனதில் இடம்பிடிக்கும் நாயகிகள் ஒரு சிலரே. அந்த வகையில் இவனா இதுவரை மூன்று தமிழ் படங்கள் மட்டுமே நடித்துள்ள நிலையில், ஒட்டு மொத்த ரசிகர்கள் மனதையும் கவர்ந்த நடிககையாக மாறியுள்ளார்.

மலையாள பைங்கிளியான இவனாவின் உண்மையான பெயர் அலீனா ஷாஜி. திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்கிற ஆசையில், வாய்ப்பு தேடிய இவருக்கு முதல் பெரிய ஹீரோவின் படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன்படி, மலையாளத்தில் நடிகர் ப்ரிதிவிராஜ் நடிப்பில் வெளியான 'மாஸ்டர்ஸ்' படத்தில் நடித்திருந்தார்.

Naai sekar Returns: போடுடா வெடி! வடிவேலுவின் 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது!

Tap to resize

இதை தொடர்ந்து ஒரு சில மலையாள படங்களில் நடித்தார். ஆனால் இவருக்கு சிறந்த நடிகைக்கான அங்கீகாரத்தை பெற்று தந்தது என்றால், அது இயக்குனர் பாலா இயக்கத்தில் நடிகை ஜோதிகா போலீஸ் அதிகாரியாக நடித்து கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான 'நாச்சியார்' திரைப்படம் தான். இந்த படத்தில் ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக இவனா நடித்திருந்தார்.

இந்த படத்தை தொடர்ந்து, சிவகார்த்திகேயன் நடித்த 'ஹீரோ' படத்தில் நடித்திருந்த இவானாவுக்கு, திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது... 'லவ் டுடே' தீரைப்படத்தின் வெற்றி. தொடர்ந்து பட வாய்ப்புகளை கைப்பற்ற முயற்சி மேற்கொண்டு வரும் இவர், அழகில் அட்ராசிட்டி செய்யும் பட்டு சேலையில் தேவதை போல் ஜொலிக்கும் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். ஊதா நிற பட்டு புடவையில் இவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பார்க்கப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது.

எலிமினேஷனில் எஸ்கேப்பான ராபர்ட் மாஸ்டர்.! இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறப்போவது இவரா? ஷாக் தகவல்!

Latest Videos

click me!