Samantha: விவாகரத்துக்கு பின்... கவர்ச்சி உடையில் தீபாவளி கொண்டாடிய சமந்தா! யாருடன் தெரியுமா? வைரலாகும் போட்டோ

First Published Nov 6, 2021, 1:05 PM IST

தன்னுடைய 4 ஆம் ஆண்டு திருமண நாளை கொண்டாடுவதற்கு முன்னரே... விவாகரத்து குறித்து அறிவித்து அதிர்ச்சி கொடுத்த சமந்தா (Samantha) , தற்போது தன்னுடைய தோழியின் குடும்பம் மற்றும்  இரண்டு செல்லங்களுடன் படு ஜோராகா தீபாவளி கொண்டாடியுள்ளார் (Diwali Celebration). இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது.

தமிழ் - தெலுங்கு என இரு மொழிகளிலும் திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து முன்னணி நாயகி என்கிற இடத்தை தக்க வைத்துள்ளநடிகை சமந்தா, 7 வருடம் காதலித்து திருமணம் செய்து கொண்ட, நாக சைதன்யாவை பிரிவதாக அறிவித்தார். சமந்தா கணவரை விட்டு பிரிந்ததற்கு பல காரணங்கள் வெளியானது.

சமந்தா ஒரு சுயநலவாதி என்றும், சமந்தா குழந்தை பெற்றுக் கொள்ள மறுத்ததாகவும் கருக்கலைப்பு செய்ததாகவும் வதந்திகள் அதிகம் பேசப்பட்டதால் மிகுந்த மனஅழுத்தத்திற்கு ஆளானார்.

இந்த வதந்திகளுக்கு முற்று புள்ளி வைக்கும் விதத்தில் சமந்தா விளக்கம் கொடுத்து அறிக்கை ஒன்றையும் வெளியிட்டார்.

மேலும் சமந்தா பற்றி அவதூறு பரப்பும் விதமாக விவாதங்கள் மற்றும் செய்திகளை பரப்பிய 3 ஊடகங்கள் மீது அவதூறு வழக்கு தொடர்ந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

விவாகரத்து விஷயத்தாலும், சமந்தா குறித்து பரவிய வதந்திகளால் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளான இவர் அதில் இருந்து வெளியேற தன்னுடைய நெருங்கிய தோழி ஷில்பா ரெட்டியுடன் ஆன்மீக பயணம் மேற்கொண்டார். இதுகுறித்த புகைப்படங்களும் சமூக வலைத்தளத்தில் வைரலானது.

மீண்டும் திரைப்படங்கள், விளம்பர படங்கள் நடிப்பதில் தன்னுடைய கவனத்தை திரும்பியுள்ள சமந்தா... இந்த வருட தீபாவளியை சிவப்பு நிற ஹாட் உடையில் தன்னுடைய நாய் குட்டிகளுடனும், மிகவும் ஹோம்லியான உடையில் தோழியின் குடும்பத்துடனும் கொண்டாடியுள்ளார்.

குறிப்பாக தான் செல்லமாக வளர்த்து வரும் நாய் குட்டிகளுடன் சமந்தாவின் தீபாவளி சிறப்பாக கொண்டாடியபடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

அதே போல், தன்னுடைய தோழி ஷில்பா ரெட்டி, ராம் சரண் மனைவி உபாசனா ஆகியோருடனும் தீபாவளியை கொண்டாடியுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தை கலக்கி வருகிறது.

சமந்தா தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 'காத்து வாக்குல ரெண்டு காதல்' மற்றும் 'சாகுந்தலம்' ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ள சமந்தா, அடுத்ததாக சில வெப் சீரீஸ் மற்றும் ஒரு பாலிவுட் படத்திலும் நடிக்க கமிட் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது.

click me!