அடேங்கப்பா... 4000 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சாய் பல்லவி படம் பற்றி தெரியுமா?

Published : Jul 15, 2025, 01:06 PM IST

சாய் பல்லவி ஹீரோயினாக நடிக்கும் படமொன்று 4000 கோடி பட்ஜெட்டில் தயாராகி வருவதாக தயாரிப்பாளர் அறிவித்துள்ளார்.

PREV
14
Ramayana Movie Budget Revealed

ரன்பீர் கபூர் நடிக்கும் 'ராமாயணம்' படம் குறித்த புதிய தகவல் வெளியாகி உள்ளது. நிதேஷ் திவாரி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் 'ராமாயணம்' திரைப்படம் அதிக எதிர்பார்ப்புக்குரிய படமாக இருந்து வருகிறது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் முதல் ப்ரோமோவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததுடன், சமூக வலைதளங்களில் வைரலானது. பிரம்மாண்டமாக உருவாகும் இப்படத்தில் ராமராக ரன்பீர் கபூரும், சீதையாக சாய் பல்லவியும் நடிக்கின்றனர். இப்படத்தை நமித் மல்ஹோத்ரா தயாரிக்கிறார். படத்தின் இரு பாகங்களுக்கும் ரூ.1600 கோடி பட்ஜெட் என முன்பு தகவல் வெளியான நிலையில், தற்போது நமித் மல்ஹோத்ரா புதிய தகவலை வெளியிட்டுள்ளார்.

24
ராமாயணம் படத்தின் பட்ஜெட் எவ்வளவு?

பிரகர் குப்தாவுடனான பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் படத்தின் பட்ஜெட் குறித்து அவர் பேசியுள்ளார். அதன்படி, 'ராமாயணம்' படத்தின் இரு பாகங்களுக்கும் சேர்த்து ரூ.4000 கோடிக்கும் மேல் செலவாகும் என்று தெரிவித்தார். இதைக்கேட்டு பலர் தன்னைப் பைத்தியம் என்கின்றனர் என்றும் அவர் கூறினார். எந்தவொரு இந்தியப் படத்தின் பட்ஜெட்டும் 'ராமாயணம்' படத்தின் பட்ஜெட்டுக்கு அருகில் கூட இல்லை என்றும், இது ஒரு மகா காவியம் என்பதால், ஒவ்வொரு சிறிய விஷயத்திலும் கவனம் செலுத்தப்படுகிறது என்றும் அவர் கூறினார். ஹாலிவுட் படங்களின் பட்ஜெட்டுடன் ஒப்பிடும்போது இது ஒன்றுமே இல்லை என்றும், உலகின் மிகச்சிறந்த மகா காவியத்தை உலகம் முழுவதும் உள்ள மக்கள் பார்க்க வேண்டும் என்பதே படக்குழுவின் விருப்பம் என்றும் அவர் தெரிவித்தார்.

34
ராமாயணம் படக்குழு சம்பளம்

நிதேஷ் திவாரி இயக்கும் இப்படத்துக்காக அவர் விரிவான ஆராய்ச்சி மேற்கொண்டுள்ளார். இரண்டு பாகங்களாக உருவாகும் இப்படத்தின் முதல் பாகத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஹான்ஸ் ஜிம்மர் மற்றும் ஏ.ஆர். ரஹ்மான் இப்படத்துக்கு இசையமைக்கின்றனர். உலகளவில் படத்தை விநியோகிக்க ஹாலிவுட் ஸ்டுடியோவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். படத்தில் உயர் தரமான ஸ்டண்ட் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. இப்படத்தில் நடிக்க ரன்பீர் கபூர் இரண்டு பாகங்களுக்கும் சேர்த்து ரூ.150 கோடியும், யாஷ் ரூ.100 கோடியும், சாய் பல்லவி ரூ.12 கோடியும் சம்பளமாக வாங்கி இருக்கிறார்களாம்.

44
'ராமாயணம்' படத்தில் நடித்துள்ள நட்சத்திரப் பட்டாளம்

'ராமாயணம்' படத்தின் இரு பாகங்களிலும் சுமார் 20 நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். ராமராக ரன்பீர் கபூர், சீதையாக சாய் பல்லவி, லட்சுமணனாக ரவி துபே, அனுமனாக சன்னி தியோல், ராவணனாக யஷ் ஆகியோர் நடிக்கின்றனர். இதுதவிர அருண் கோவில், லாரா தத்தா, ரகுல் ப்ரீத் சிங், காஜல் அகர்வால், இந்திரா கிருஷ்ணன், ஷிபா சத்தா, மோஹித் ரெய்னா, குணால் கபூர், விவேக் ஓபராய், ஷோபனா, அமிதாப் பச்சன் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். படத்தின் முதல் பாகம் 2026ம் ஆண்டு தீபாவளிக்கும், இரண்டாம் பாகம் 2027ம் ஆண்டு தீபாவளிக்கும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories