நயன்தாராவை விட அதிக சம்பளம் வாங்கும் சாய் பல்லவியின் வியக்க வைக்கும் சொத்து மதிப்பு!

Published : May 09, 2025, 02:04 PM IST

நடிகை சாய் பல்லவி இன்று தனது 33வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், அவரின் சொத்து மதிப்பு எவ்வளவு என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

PREV
15
நயன்தாராவை விட அதிக சம்பளம் வாங்கும் சாய் பல்லவியின் வியக்க வைக்கும் சொத்து மதிப்பு!
Sai Pallavi Birthday

தென்னிந்திய ரசிகர்களின் விருப்பமான நடிகைகளில் ஒருவர் சாய் பல்லவி. இன்று சாய் பல்லவியின் பிறந்தநாள். மலையாள படம் மூலம் அறிமுகமான சாய் பல்லவி, பின்னர் தெலுங்கு, தமிழ் படங்களில் நடித்து புகழின் உச்சிக்கு சென்றார். தற்போது ராமாயணம் படம் மூலம் பாலிவுட்டிலும் கால் பதித்து பான் இந்தியா நாயகியாக உருவெடுத்துள்ளார் சாய் பல்லவி. அவருக்கு தற்போது 33 வயது ஆகிறது. அவரின் சொத்து மதிப்பு குறித்த விவரம் வெளியாகி உள்ளது.

25
சாய் பல்லவி சொத்து மதிப்பு

அதன்படி நடிகை சாய் பல்லவியின் சொத்து மதிப்பு ரூ.47 கோடி இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் ஒரு படத்திற்கு ரூ.15 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம், வாங்கும் நடிகையாகவும் சாய் பல்லவி வலம் வருகிறார். மருத்துவம் படித்த சாய் பல்லவி, படித்து முடித்ததும் சினிமாவில் நாயகியாக களமிறங்கி கலக்கி வருகிறார். இவரின் சொந்த ஊர் ஊட்டி அருகே உள்ள கோத்தகிரி. இவர் படுகர் என்கிற பழங்குடி இனத்தை சேர்ந்தவர்.

35
தொடர் வெற்றியை ருசிக்கும் சாய் பல்லவி

சாய் பல்லவி நடித்த படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்று வருகின்றன. சாய் பல்லவி நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் 'தண்டேல்'. ஸ்ரீகாக்குளத்தைச் சேர்ந்த 21 மீனவர்களின் கதையைச் சொல்லும் படம் இது. வேலைக்காக குஜராத்திற்குச் செல்லும் இவர்கள், தெரியாமல் பாகிஸ்தான் கடல் பகுதிக்குள் சென்று சிக்கிக் கொள்கிறார்கள். சிறையில் அடைக்கப்பட்ட மீனவர்களின் கதையைச் சொல்வதுதான் 'தண்டேல்'. பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான படம், வசூலிலும் சாதனை படைத்தது. 

45
தண்டேல் நாயகி சாய் பல்லவி

இந்தியாவில் மட்டும் ரூ.50 கோடி வசூலித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உலக அளவில் ரூ.100 கோடிக்கும் மேல் வசூலித்தது. இந்தப் படத்தில் நாக சைதன்யா நாயகனாக நடித்தார். தனது உரிமைகளுக்காகப் போராடும் இளம்பெண்ணாக சாய் பல்லவி நடித்தார். சந்து மொண்டேட்டி இயக்கிய 'தண்டேல்' விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது.

55
அமரன் ஹீரோயின் சாய் பல்லவி

சாய் பல்லவி தமிழில் கடைசியாக நடித்த 'அமரன்' படமும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்த இப்படத்தில் அவரின் மனைவியாக நடித்திருந்தார் சாய் பல்லவி. அமரன் திரைப்படம் உலக அளவில் ரூ.334 கோடிக்கும் மேல் வசூலித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரித்த இப்படம் காஷ்மீரில் படமாக்கப்பட்டது. ராஜ்குமார் பெரியசாமி இப்படத்தை இயக்கினார். இதில் சாய் பல்லவி இந்து ரெபேகா வர்கீஸ் என்கிற கேரக்டரில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more Photos on
click me!

Recommended Stories