பாலிவுட் நடிகர் ஒருவர், டிம்பிள் கம்போடியா, பத்மினி கோலாபூர், ரேகா போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்திருந்தாலும் அவர் இதுவரை ஒரு ஹிட் படம் கூட கொடுத்ததில்லை. அதுமட்டுமின்றி அவர் நடிகை மாதுரி தீக்ஷித்துக்கு டிரைவராகவும் பணியாற்றி இருக்கிறார். அந்த நடிகரின் பெயர் சேகர் சுமன். இவர் 1980-களில் இந்தி படங்களில் நடித்து வந்தார். கடந்த 1984-ம் ஆண்டு வெளியான உத்சவ் என்கிற பாலிவுட் படம் மூலம் அறிமுகமானார் சேகர் சுமன்.
24
முதல் படத்திலேயே ரேகா உடன் ஜோடி சேர்ந்த நடிகர்
அவரின் முதல் படத்திலேயே அவருக்கு ஜோடியாக நடிகை ரேகா நடித்தார். அப்படத்தில் ரேகா உடன் படுக்கையறை காட்சியிலும் நடித்திருந்தார் சேகர் சுமன். அதனால் முதல் படத்திலேயே பரபரப்பாக பேசப்பட்டார். முதல் படத்திலேயே கவனம் ஈர்த்த சேகர் சுமன், பாலிவுட்டில் தொடர்ந்து பல்வேற்று ஏற்ற இறக்கங்களை சந்தித்தார். இதனால் ஒரு கட்டத்தில் நடிகை மாதுரி தீக்ஷித்துக்கு டிரைவராகவும் பணியாற்றி வந்துள்ளார் நடிகர் சேகர் சுமன்.
34
மாதுரி தீக்ஷித் டிரைவராக இருந்த நடிகர்
மனவ் ஹத்யா என்கிற சிறு பட்ஜெட் படத்தில் மாதுரி தீக்ஷித்துக்கு ஜோடியாக நடித்தபோது, தினமும் மாதுரி தீக்ஷித்தை வீட்டில் பிக் அப் செய்து ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வருவது மட்டுமின்றி ஷூட்டிங் முடிந்ததும் பத்திரமாக அவரை வீட்டிலும் இறக்கிவிடுவாராம். இப்படி சினிமாவில் பல கஷ்டங்களை சந்தித்த சேகர் சுமனுக்கு பல வருடங்களாக நடித்தும் ஒரு வெற்றிகூட கிடைக்கவில்லை. ஹீரோவாக அவருக்கு வெற்றி கிடைக்காவிட்டாலும் அவர் குணச்சித்திர வேடத்தில் நடித்த ஹீராமண்டி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
சினிமாவில் அவருக்கு எதிர்பார்த்த பெயரும் புகழும் கிடைக்காவிட்டாலும், அவர், சின்னத்திரை தொடர்களில் நடித்து பெயரையும் புகழையும் பெற்றார். நடிகர் சேகர் சுமனின் சொத்து மதிப்பு குறித்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன. அதன்படி இந்தியா டாட்காம் வெளியிட்டுள்ள தகவலின்படி, சேகர் சுமனின் சொத்து மதிப்பு ரூ.20 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.