2வது திருமணம் செய்துகொண்டாரா ரவி மோகன்? காட்டுத்தீ போல் பரவும் போட்டோ

Published : May 09, 2025, 10:10 AM ISTUpdated : May 09, 2025, 10:14 AM IST

சென்னையில் நடைபெற்ற ஐசரி கணேஷின் மகள் திருமணத்தில் கலந்துகொள்ள நடிகர் ரவி மோகன் பெண் ஒருவருடன் வந்திருந்தார். அந்த பெண் யார் என்கிற தகவல் வெளியாகி உள்ளது.

PREV
15
2வது திருமணம் செய்துகொண்டாரா ரவி மோகன்? காட்டுத்தீ போல் பரவும் போட்டோ
Ravi Mohan Viral Photo at Ishari Ganesh Daughter Wedding

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரவி மோகன். இவர் நடிப்பில் தற்போது பராசக்தி திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை சுதா கொங்கரா இயக்குகிறார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடிக்கிறார் ரவி மோகன். இதுதவிர இவர் கைவம் கராத்தே பாபு என்கிற திரைப்படமும் உள்ளது. இப்படத்தை கணேஷ் கே பாபு இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

25
ரவி மோகன் - ஆர்த்தி விவாகரத்து

நடிகர் ரவி மோகனுக்கு கடந்த 2009-ம் ஆண்டு ஆர்த்தி என்பவருடன் திருமணம் ஆனது. இந்த ஜோடிக்கு இரண்டு ஆண் குழந்தைகளும் உள்ளது. சுமார் 15 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த இந்த ஜோடி கடந்த ஆண்டு விவாகரத்து செய்து பிரிய உள்ளதாக அறிவித்தனர். இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிய முடிவு செய்துள்ளனர். தற்போது இவர்களின் விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

35
ஐசரி கணேஷ் மகள் திருமணம்

தமிழ் சினிமாவில் பிசியான தயாரிப்பாளராக வலம் வருபவர் ஐசரி கணேஷ். இவரது மகள் ப்ரீத்தாவுக்கு இன்று சென்னையில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் தமிழ் சினிமா பிரபலங்களும் படையெடுத்து வந்து கலந்துகொண்டனர். ஒரே மகள் என்பதால், அவரின் திருமணத்தை ஜாம் ஜாம் என படு பிரம்மாண்டமாக நடத்தி இருக்கிறார் ஐசரி கணேஷ். திருமணத்திற்கு வந்த பிரபலங்களின் புகைப்படங்களும் வெளியாகி வைரலாகி வருகின்றன.

45
ரவி மோகன் உடன் வந்தது யார்?

ஐசரி கணேஷ் மகள் திருமணத்தில் நடிகர் ரவி மோகனும் கலந்துகொண்டார். அவரின் புகைப்படம் தான் தற்போது சமூக வலைதளத்தில் பேசுபொருள் ஆனது. அவர் ஒரு பெண்ணோடு வந்து இந்த திருமணத்தில் கலந்துகொண்டார். இருவரும் ஜோடியாக மேட்சிங் மேட்சிங் உடையணிந்து அமர்ந்திருந்தபோது எடுத்த புகைப்படங்கள் வெளியாகின. அந்த பெண் யார் என கேள்வி எழுந்து வந்தது. அவர் வேறுயாருமில்லை, பாடகி கெனிஷா தான். ரவி மோகன் - ஆர்த்தி விவாகரத்திற்கு காரணம் இந்த கெனிஷா தான் என்று பேச்சு அடிபட்டது. பின்னர் தாங்கள் நண்பர்கள் என்றும், விளக்கம் அளித்தனர்.

55
ரவி மோகன் 2வது திருமணமா?

கெனிஷா உடன் ரவி மோகன் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் அவர் இரண்டாவது திருமணம் செய்துகொண்டாரா என கேள்வி எழுப்பி வருகின்றனர். ஒரு சிலரோ இருவரும் தங்கள் ரிலேஷன்ஷிப்பை சூசகமாக அறிவிக்கவே இப்படி ஜோடியாக வந்துள்ளதாக கூறி வருகின்றனர். இன்னும் ஆர்த்தி உடன் அதிகாரப்பூர்வமாக விவாகரத்து கிடைக்காததால் ஜெயம் ரவி - கெனிஷா இருவரும் தற்போது லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருக்க வாய்ப்பு உள்ளதாகவும் இணையவாசிகள் பேசி வருகின்றனர்.

Read more Photos on
click me!

Recommended Stories