இந்திய ராணுவ தாக்குதலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட டாப் 7 படங்கள் - எந்தெந்த OTTயில் பார்க்கலாம்?

Published : May 09, 2025, 09:14 AM IST

இந்தியா - பாகிஸ்தான் இடையேயேன போரை மையமாக வைத்து எடுக்கப்பட்டு ஹிட்டான இந்திய படங்களையும், அது எந்தெந்த ஓடிடியில் ஸ்ட்ரீம் ஆகிறாது என்பதையும் இந்த தொகுப்பில் காணலாம்.

PREV
17
இந்திய ராணுவ தாக்குதலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட டாப் 7 படங்கள் - எந்தெந்த OTTயில் பார்க்கலாம்?
உரி: தி சர்ஜிக்கல் ஸ்டிரைக் - உண்மைக் கதை

விக்கி கௌஷல் நடித்த இந்தப் படத்தை ஆதித்ய தர் இயக்கியுள்ளார். 2016ல் நடந்த உரி தாக்குதலுக்குப் பழிவாங்கும் விதமாக இந்திய விமானப்படை பாகிஸ்தான் மீது நடத்திய சர்ஜிக்கல் ஸ்டிரைக்கின் உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டது. இந்த படத்தை ஜீ5 ஓடிடி தளத்தில் பார்க்கலாம்

27
அவரோத்: தி சீஜ் விதின - உண்மை நிகழ்வுகள்

ராஜ் ஆச்சார்யா இயக்கிய இந்த வெப் சீரிஸில் அமித் சதா, விக்ரம் கோகலே, நீரஜ் காபி, தர்ஷன் குமார், அனந்த் நாராயண் மகாதேவன் மற்றும் மதுரிமா துலி போன்றோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். உரி சர்ஜிக்கல் ஸ்டிரைக் மற்றும் பாலாகோட் வான்வழித் தாக்குதல் போன்ற நிகழ்வுகள் இதில் இடம்பெற்றுள்ளன. இந்த வெப் சீரிஸ் சோனி லிவ் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகிறது.

37
ரக்ஷக்: இந்தியாஸ் பிரேவ் - புல்வாமா தாக்குதல்

பரூன் சோப்தி, சுரபி சந்தனா மற்றும் விஸ்வாஸ் கின்னி போன்றோர் நடிக்கும் இந்த வெப் சீரிஸ், புல்வாமாவில் நடந்த தீவிரவாதத் தாக்குதலுக்குப் பிறகு இந்திய ராணுவம் மேற்கொண்ட நடவடிக்கையின் கதையைக் கூறுகிறது. ஜக்ர்நாட் புரொடக்ஷன்ஸ் இதைத் தயாரித்துள்ளது. இந்த வெப் சீரிஸை அமேசான் பிரைம் ஓடிடியில் பார்க்கலாம்.

47
ரன்நீதி: பாலாகோட் - தாக்குதல் பின்னணி

பெயர் குறிப்பிடுவது போல, இந்த வெப் சீரிஸ்-ன் கதை பாலாகோட் வான்வழித் தாக்குதலை அடிப்படையாகக் கொண்டது. சந்தோஷ் சிங் நடிக்கும் இந்தத் தொடரில் ஜிம்மி ஷெர்கில், ஆஷிஷ் வித்யார்த்தி, அஷுதோஷ் ராணா, லாரா தத்தா மற்றும் பிரசன்னா போன்றோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த வெப் சீரிஸ் ஜியோ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீம் ஆகிறது

57
ஃபைட்டர் - பாலாகோட் தாக்குதல் கதை

புல்வாமா தாக்குதலுக்குப் பழிவாங்கும் விதமாக 2019ல் இந்திய விமானப்படை நடத்திய பாலாகோட் வான்வழித் தாக்குதலின் கதையை இந்தப் படம் சித்தரிக்கிறது. ரித்திக் ரோஷன், அனில் கபூர் மற்றும் தீபிகா படுகோன் நடிக்கும் இந்தப் படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்கியுள்ளார். இப்படத்தை நெட்பிளிக்ஸில் பார்க்கலாம்

67
ஆபரேஷன் வாலண்டைன் - புல்வாமா & பாலாகோட்

2019ல் புல்வாமாவில் நடந்த தீவிரவாதத் தாக்குதல் மற்றும் அதைத் தொடர்ந்து இந்திய விமானப்படை நடத்திய பாலாகோட் வான்வழித் தாக்குதல் பற்றியது இந்தப் படம். சக்தி பிரதாப் சிங் ஹடா இயக்கியுள்ள இந்தப் படத்தில் வருண் தேஜ், மானுஷி சில்லர், நவ்தீப் மற்றும் பரேஷ் பஹுஜா போன்றோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படம் அமேசான் பிரைம் வீடியோவில் உள்ளது.

77
ஸ்கை ஃபோர்ஸ் - 1965 வான்வழித் தாக்குதல்

அக்ஷய் குமார் மற்றும் வீர் பஹாடியா நடிக்கும் இந்தப் படத்தை அபிஷேக் அனில் கபூர் மற்றும் சந்தீப் கேவலானி இயக்கியுள்ளனர். 1965ல் இந்திய விமானப்படை பாகிஸ்தான் மீது நடத்திய முதல் வான்வழித் தாக்குதலின் கதையை இந்தப் படம் சித்தரிக்கிறது. இப்படத்தை அமேசான் பிரைம் வீடியோவில் பார்க்கலாம்.

Read more Photos on
click me!

Recommended Stories