விவாகரத்தாகி ஒரு வருஷம் கூட ஆகல... அதற்குள் 2-வது திருமணமா..? சமந்தா குறித்து வெளியான ஷாக்கிங் தகவல்

Published : Sep 18, 2022, 12:39 PM IST

samantha : நடிகை சமந்தா இரண்டாவது திருமணம் செய்துகொள்ள தயாராகி வருவதாக தகவல் ஒன்று டோலிவுட் வட்டாரத்தில் பரவி வருகிறது.

PREV
15
விவாகரத்தாகி ஒரு வருஷம் கூட ஆகல... அதற்குள் 2-வது திருமணமா..? சமந்தா குறித்து வெளியான ஷாக்கிங் தகவல்

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி ஹீரோயினாக வலம் வருபவர் சமந்தா. தமிழகத்தை சேர்ந்த இவர் முதன்முதலில் ஹீரோயினாக நடித்த படம் மாஸ்கோவின் காவிரி. இதையடுத்து கவுதம் மேனன் இயக்கிய விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு பதிப்பில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பேமஸ் ஆனார். இப்படத்தின் மூலம் தான் நாக சைதன்யாவுடன் அவருக்கு நட்பு ஏற்பட்டது.

25

இந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியது. பின்னர் சில ஆண்டுகள் காதலித்து வந்த இவர்கள், கடந்த 2017-ம் ஆண்டு கோவாவில் திருமணம் செய்துகொண்டனர். திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வந்த போதே நடிகை சமந்தா திருமணம் செய்துகொண்டது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. இருப்பினும் திருமணத்திற்கு பின்னரும் சினிமாவில் தொடர்ந்து ஹீரோயினாக நடித்து வந்தார் சமந்தா.

35

காதல் திருமணம் செய்துகொண்ட சமந்தா - நாக சைதன்யா ஜோடி நான்கே ஆண்டுகளில் பிரிந்தது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து பிரிவதாக அறிவித்தனர். அவர்களின் இந்த திடீர் முடிவு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையும் படியுங்கள்... இதெல்லாம் கொஞ்சம் ஓவரா இருக்கே!..கேமராவை பார்த்ததும் உடையை இறக்கி விட்ட சர்ச்சை நடிகை

45

விவாகரத்துக்கு பின்னர் இருவரும் சினிமாவில் தங்களது முழு கவனத்தை செலுத்தி வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடிகர் நாக சைதன்யா, பொன்னியின் செல்வன் பட நடிகை சோபிதாவை காதலித்து வருவதாகவும், இருவரும் ஒன்றாக டேட்டிங் செய்து வருவதாகவும் டோலிவுட் வட்டாரத்தில் தகவல் பரவியது.

55

இந்நிலையில், தற்போது நடிகை சமந்தா இரண்டாவது திருமணம் செய்துகொள்ள தயாராகி வருவதாக தகவல் ஒன்று டோலிவுட் வட்டாரத்தில் பரவி வருகிறது. அவர் பாலிவுட்டை சேர்ந்த நடிகரை காதலிப்பதாகவும், விரைவில் அவரை 2-வது திருமணம் செய்துகொள்ள உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் சமந்தா தரப்போ இதனை திட்டவட்டமாக மறுத்து வருகிறதாம். 

இதையும் படியுங்கள்... வாவ்..எவ்ளோ சமத்தா இருக்காரு! தளபதி விஜய் ஆசிரியருடன் இருக்கும் புகைப்படம்...

Read more Photos on
click me!

Recommended Stories