சிவாஜி கணேசனின் முதல் படம்... வைரலாகிறது பார்த்திராத படப்பிடிப்புத்தள புகைப்படம்

First Published Sep 18, 2022, 10:15 AM IST

நடிகர் திலகம் பராசக்தி படத்தில் படப்பிடிப்பின் போது நிறைய திலகம் சிவாஜி கணேசனின் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது

parasakthi

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தனது பன்முகத் திறமையால் இன்றும் திரையுலகில் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறார். தனக்கான கதாபாத்திரங்களை தத்துரூபமாக நடித்து அதில் வாழ்ந்து காட்டும் நடிகர் திலகம் மூன்று தலைமுறை ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடம் பிடித்தவர். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என சுமார் 288 படங்களில் நடித்துள்ளார். அதோடு 250 படங்களுக்கு மேல் கதாநாயகனாகவும் நடித்த ஒரே தமிழ் நடிகர் சிவாஜி கணேசன் மட்டும்தான்.

வாவ்..எவ்ளோ சமத்தா இருக்காரு! தளபதி விஜய் ஆசிரியருடன் இருக்கும் புகைப்படம்...

parasakthi

தேசிய திரைப்பட விருது தாதா சாகிப் பல்கி விருது உள்ளிட்ட பல பெருமைகள் சிவாஜி கணேசனை வந்து சேர்ந்துள்ளது. இவர் 1952 ஆம் ஆண்டு தமிழ் திரைப்படமான பராசக்தியின் மூலம் தான் அறிமுகமானார். கிருஷ்ணன் - பஞ்சு என இரட்டை இயக்குனர்கள் இயக்கிய இந்த படத்திற்கு கலைஞர் கருணாநிதி வசனம் எழுதிக் கொடுத்திருந்தார்.

மேலும் செய்திகளுக்கு... வயதை மிஞ்சிய நடிப்பு...இந்தியன் 2 படப்பிடிப்பில் நான்ஸ்டாப் ரிஸ்க் எடுத்த கமலஹாசன்

parasakthi

ஆனால் இந்த படம் பலகட்ட இடையூறுகளுக்குப் பிறகு படமாக்கப்பட்டது. முதல் படத்திலேயே தனது நவரசங்களையும் கொட்டி திரை உலகை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தார் சிவாஜி கணேசன். அந்தப் படத்தில் இவர் மூச்சு விடாமல் பேசும் வசனங்கள் இன்றளவும் உயிர்ப்புடன் தான் வலம் வருகிறது.  இந்நிலைகள் நடிகர் திலகம் பராசக்தி படத்தில் படப்பிடிப்பின் போது நிறைய திலகம் சிவாஜி கணேசனின் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது

Sivaji

பராசக்தியை தொடர்ந்து வீரபாண்டிய கட்டபொம்மன், பாசமலர், முள்ளும் மலரும், படிக்காத மேதை, ஆண்டவன் கட்டளை, கப்பலோட்டிய தமிழன் என பல வெற்றிப் படங்களிலும், வரலாற்று சிறப்புமிக்க படங்களிலும் தோன்றிய சிவாஜி கணேசன் அவரது நூறாவது படமான "நவராத்திரி" என்னும் படத்தில் ஒன்பது வித்தியாசமான வேடங்களில் நடித்து பிரமிப்பை ஏற்படுத்தியிருந்தார்.

sivaji

பின்னர் 90களில் இவர் நடித்த முதல் மரியாதை படம் இளைஞர்களையும் இவர் பக்கம் ஈர்த்தது. கமல்ஹாசன் நாயகனாக நடித்த தேவர் மகனில் இவரை யாரும் மறந்திருக்க வாய்ப்பே இல்லை. பின்னர் மூன்றாவது தலைமுறை நடிகர் விஜயுடன் ஒன்ஸ்மோர், தொடர்ந்து என் ஆசை ராசாவே, மன்னவரு சின்னவரு உள்ளிட்ட படங்களில் முக்கிய வேடங்களில் வேடங்கள் தரித்திருந்தார். கடைசியாக சூப்பர் ஸ்டாரின் படையப்பா படத்தில் நாயகனுக்கு தந்தையாக நடித்து அசத்தியிருந்த சிவாஜி கணேசன் 1999 ஆம் ஆண்டு இப் பூவுலகை விட்டு மறைந்தார். அவர் மறைந்தாலும் அவரது நடிப்பால் உண்டான புகழ் ரசிகர்கள் உள்ளவரை மறைய போவதில்லை.

click me!