என்னது இந்த நடிகர்களுக்கெல்லாம் நடிக்கவே தெரியாதா? இது என்ன புது உருட்டா இருக்கே

First Published Sep 18, 2022, 9:03 AM IST

தமிழ் சினிமாவில் நடிப்பே வராது என முத்திரை குத்தப்பட்ட நடிகர்கள் யாரெல்லாம் தெரியுமா?

actor shiva

சூப்பர் ஸ்டார்களும் பிளாக்பஸ்டர் நாயகர்களும் ஒரு பக்கம் இருக்கையில், சில நடிகர்களுக்கு நடிக்கவே தெரியாமல் படங்களை ஒப்பேத்திக் கொண்டிருக்கின்றனர் என்கிற கருத்தும் ஒருபுறம் நிழவதான் செய்கிறது. அந்த வகையில் ஒரு சில நடிகர்கள் குறித்த விமர்சனங்கள் தற்போது வைரலாகி வருகிறது. அதன்படி ரேடியோ மிர்ச்சியில் ஆர்.ஜேவாக இருந்த மெர்சி சிவாஇவர் வெங்கட் பிரபுவின் சென்னை 600028 படம் மூலம் பிரபலமானார். பின்னர் சரோஜா, தமிழ் படம், தமிழ் படம் 2.0 என்கிற பல படத்திலும் நடித்த இவர் ஏனோ ரசிகர்களுக்கு பிடித்த நடிகர்களில் ஒருவரானார். ஆனால் இவருக்கு நடனமோ அல்லது வசனமோ கூட சரியாக வராது என்கிற கருத்து நிலவுகிறது.

மேலும் செய்திகளுக்கு... வயதை மிஞ்சிய நடிப்பு...இந்தியன் 2 படப்பிடிப்பில் நான்ஸ்டாப் ரிஸ்க் எடுத்த கமலஹாசன்

udhayanidhi stalin

தயாரிப்பாளராக தமிழ் சினிமாவில் கலக்கி வந்த உதயநிதி ஸ்டாலின் சூர்யாவின் ஆதவன் படத்தில் கிளைமாக்ஸ் சீன்னில் தோன்றியிருந்தார். அதன் பின்னர் இவரிடம் யாரோ நீங்கள் ஹீரோ மெட்டீரியல் எனக் கூற படங்களில் நாயகனாகும் முயற்சியில் இறங்கினார் உதயநிதி ஸ்டாலின். பிரபல அரசியல்வாதியின் மகன் பெரிய தயாரிப்பாளர் என்னும் பெயருடன் சினிமாத்துறைக்குள் காலெடுத்து வைத்த இவரின் முதல் படம் ஒரு கல் ஒரு கண்ணாடி ஆனால் இந்த படத்தில் இவருக்கு சரியாக வசனமும் பேசத் தெரியாது முறையாக நடனமும் ஆட தெரியாது. சந்தானத்தை வைத்து அந்த படத்தை ஒப்பேத்தி  இருப்பார்கள். இதைத்தொடர்ந்து கதிர்வேலன் காதல், நண்பேண்டா, கெத்து, மனிதன், சரவணன் இருக்க பயமேன் என அடுத்தடுத்த படங்களிலும் நடித்தார். இறுதியாக இவர் நடிப்பில் நெஞ்சுக்கு நீதி படம் வெளியானது. தற்போது மாமன்னன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை அடுத்து சினிமாவிற்கு முழுக்க போடும் எண்ணத்தில் இருக்கிறாராம்  உதயநிதி.

மேலும் செய்திகளுக்கு...வெளியீட்டு உரிமை ரெட் ஜெயன்ட் சாட்டிலைட் உரிமை சன் டிவி PS 1 வளைத்து பிடித்த திமுக குடும்பம்

harish kalyan

இவரைத் தொடர்ந்து பிக்பாஸ் ஹரிஷ் கல்யாண். சிந்து சமவெளி என்கிற படத்தில் மூலம் தமிழ் சினிமா உலகுக்கு அறிமுகமானார். ஆனால் முதல் படமே சர்ச்சைக்குரிய படமாக அமைந்தது. அதன் பின் அரிது அரிது. சட்டப்படி குற்றம், சந்தா மாமா, பொறியாளர் போன்ற படங்களிலும் இவர் நடித்திருக்கிறார். ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகே இவர் பிரபலமானார். அதன் பின்னர் இவருக்கு ஒரு சில பட வாய்ப்புகள் கிடைத்தாலும் முறையான வெற்றி எதுவும் கிடைக்கவில்லை.

GV Prakash

இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ். ஆஸ்கர் நாயகன் ஏ ஆர் ரகுமானின் உறவுக்காரரான ஜீவி பிரகாஷ் வெயில் படம் மூலம் இசையமைப்பாளராக உருவெடுத்தார். இவர் இசையில் சாதித்தது பல உண்டு. தல அஜித்தின் கிரீடம் படத்தில் இவரது இசை ரசிகர்களை வெகுவாகவே கவர்ந்து இருக்கிறது. இவர் அப்படியே பயணித்திருக்கலாம். ஆனால் இவரிடமும் யாரோ நீங்கள் நாயகனுக்கான தகுதி உள்ளவர்கள் என தெரிவித்ததை அடுத்து டார்லிங் படத்தில் நடித்திருந்தார். பின்னர் சில அடல்ட் படங்களை தேடி தேடி நடித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் இசையமைப்பாளருக்கு கிடைத்த எந்த அங்கீகாரமம் நாயகனாக இவருக்கு  கிடைக்கவில்லை.

hiphop tamizha adhi

மற்றொரு இசையமைப்பாளர் ஹிப் ஹாப் தமிழா ஆதி. தமிழ் ஹிப் ஹாப் என்கின்ற இசைக் குழுவை துவங்கி அதன் பிறகு 2015 ஆம் ஆண்டு மீசைய முறுக்கு படத்தின் மூலம் அறிமுகமானவர் ஹிப் ஹாப் தமிழா ஆதி. இவர் ஆம்பள, இன்று நேற்று நாளை, தனி ஒருவன், அரண்மனை 2 போன்ற படங்களில் பாடகராகவும் ரசிகர்கள் மனதில் நின்றிருந்தவர். மீசைய முறுக்கு படத்தை தொடர்ந்து சிவக்குமாரின் சபதம், அன்பறிவு, நட்பே துணை, நான் சிரித்தால் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். ஆனால் இவருக்கும் நடிப்பு சுத்தமாகவே வராது என ரசிகர்கள் மத்தியில் கருத்துண்டு. இவர் நடிக்க வேண்டும் என்கிற ஆசையில் இசை பயணத்தையும் தொலைத்துவிட்டார் எனவும் பலரும் இவரை விமர்சித்து வருகின்றனர்.

click me!