VARISU
தளபதி விஜய் தற்போது வாரிசு படத்தில் பிஸியாக இருக்கிறார். தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கும் இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, ஷாம், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இணைந்துள்ளது. இந்த படத்திற்கு தமன் இசை அமைக்கிறார். தெலுங்கு தயாரிப்பாளரான தில் ராஜூ தயாரிக்கும் வாரிசு படத்தின் டைட்டில் லுக் போஸ்டர்கள் மூன்று அடுத்தடுத்து வெளியாகிய ரசிகர்களை குதூகல படுத்தின. இதற்கிடையே படப்பிடிப்புத்தள வீடியோக்களும் புகைப்படங்களும் வைரலாகி வருகிறது.
varisu second look poster
ஹைதராபாத், சென்னை, விசாகப்பட்டினம் என இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வாரிசு படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். குடும்ப செண்டிமெண்ட் படமான இந்தப் படத்தில் வெளிநாட்டிலிருந்து வரும் கிராமத்து நாயகனாக விஜய் தோன்றுவார் என தெரிகிறது. அதோடு பூவே உனக்காக படத்தின் சாயலில் இந்த படம் உருவாவதாகவும் ஒரு பேச்சு உண்டு. முன்னதாக வெளியான போஸ்டர்களில் பிளாக் பெப்பர் ஸ்டைலில் கவர்ந்திருந்தார் தளபதி விஜய்.
மேலும் செய்திகளுக்கு... என்னது இந்த நடிகர்களுக்கெல்லாம் நடிக்கவே தெரியாதா? இது என்ன புது உருட்டா இருக்கே
vijay
இதற்கிடையே அவ்வப்போது விஜயின் சிறுவயது புகைப்படங்களும் அவரது சகோதரி உடனான புகைப்படங்களும் சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வந்தன. அந்த வகையில் தற்போது விஜய் பள்ளிப் பருவத்தில் தனது ஆசிரியருடன் அமர்ந்து எடுத்துக் கொண்ட குரூப் போட்டோ ஒன்று தற்போது ரசிகர்களால் ட்ரெண்டாக்கப்பட்டு வருகிறது.