தமிழ் புத்தாண்டு ரிலீசுக்காக வரிசைகட்டும் சிறுபட்ஜெட் படங்கள்! ஏப்ரல் 14-ல் ரிலீசாகும் தமிழ் படங்கள் என்னென்ன?

First Published | Apr 4, 2023, 1:14 PM IST

தமிழ் புத்தாண்டுக்கு புதுப்படங்கள் ரிலீஸ் ஆவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு ஏப்ரல் 14-ந் தேதி அரை டஜன் படங்கள் ரிலீஸ் ஆக உள்ளதாம்.

ருத்ரன்

தமிழ் திரையுலகில் பல்வேறு வெற்றிப்படங்களை தயாரித்த பைவ் ஸ்டார் கதிரேசன் இயக்குனராக அறிமுகமாகி உள்ள திரைப்படம் தான் ருத்ரன். ராகவா லாரன்ச் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து உள்ளார். இப்படம் வருகிற ஏப்ரல் 14-ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

சொப்பன சுந்தரி

ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடித்துள்ள சொப்பன சுந்தரி திரைப்படமும் வருகிற ஏப்ரல் 14-ந் தேதி தமிழ் புத்தாண்டுக்கு ரிலீஸ் ஆக உள்ளது. எஸ்.ஜி.சார்லஸ் இயக்கியுள்ள இப்படத்திற்கு விஷால் சந்திரசேகர் பின்னணி இசை அமைத்து உள்ளார்.

Tap to resize

திருவின் குரல்

அருள்நிதி நாயகனாக நடித்துள்ள படம் திருவின் குரல். இப்படத்தை ஹரிஷ் பிரபு இயக்கி உள்ளார். இப்படத்தில் அருள்நிதிக்கு ஜோடியாக ஆத்மிகா நடித்துள்ளார். பாரதிராஜாவும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படமும் வருகிற ஏப்ரல் 14-ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

யானை முகத்தான்

யோகிபாபு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் யானை முகத்தான். ரெஜிஷ் மிதிலா இயக்கத்தில் உருவாகி உள்ள இப்படத்தில் ரமேஷ் திலக், ஊர்வசி, கருணாகரன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. பரத் ஷங்கர் இசையமைத்துள்ள இப்படமும் வருகிற ஏப்ரல் 14-ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

இதையும் படியுங்கள்... பாவடை தாவணி அணிந்து... காதலனுடன் திருப்பதிக்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த ஜான்வி கபூர்... வைரலாகும் போட்டோஸ்

ரிப்பப்பரி

மாஸ்டர் மகேந்திரன் நாயகனாக நடித்துள்ள திரைப்படம் ரிப்பப்பரி. அருண் கார்த்திக் இயக்கியுள்ள இப்படத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து பிரபலமான காவியா அறிவுமணி ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படமும் வருகிற ஏப்ரல் 14-ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

தமிழரசன்

பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் தமிழரசன். இப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்துள்ளார். இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ள இப்படம் வருகிற ஏப்ரல் 14-ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

சாகுந்தலம்

மேற்கண்ட 6 தமிழ்படங்களுடன் சமந்தா நடித்துள்ள சாகுந்தலம் என்கிற பான் இந்தியா படமும் வருகிற ஏப்ரல் 14-ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. தெலுங்கில் உருவாகி உள்ள இப்படம் தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிடப்பட உள்ளது.

இதையும் படியுங்கள்... 'சரிகமப' டைட்டில் வின்னர் மற்றும் பின்னணி பாடகி ராக் ஸ்டார் ரமணியம்மாள் அதிர்ச்சி மரணம்..!

Latest Videos

click me!