Published : Apr 04, 2023, 01:04 PM ISTUpdated : Apr 04, 2023, 05:01 PM IST
பின்னணி பாடகியும், சரிகமப நிகழ்ச்சி மூலம் பிரபலமான ராக் ஸ்டார் ரமணியம்மாள்... உடல்நல பிரச்சனை காரணமாக உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து, தன்னுடைய திறமை மூலம் மட்டுமே பின்னணி பாடகியாக மாறியவர் ரமணியம்மாள். 1954 ஆம் ஆண்டு சென்னை, மேற்கு மாம்பலம் பகுதியில் பிறந்த இவருக்கு சிறு வயதிலேயே திருமணம் ஆனது. பின்னர் குடும்ப சூழ்நிலை காரணமாக, தன்னுடைய பாட்டு திறமையை கோவில் திருவிழா, மற்றும் மேடைகளில் வெளிப்படுத்தி வந்த ரமணியம்மாள், பல வருடங்கள் தன்னுடைய பிள்ளைகளை காப்பாற்ற, வீட்டு வேலை செய்து குடும்பத்தை காப்பாற்றியவர்.
26
இந்நிலையில் கடந்த 2004 ஆம் ஆண்டும், ரமணியம்மாளுக்கு காதல் படத்தில் இடம்பெற்ற நாட்டுப்புற பாடலான, 'தண்டட்டி கருப்பாயி' பாடலில் கோரஸ் பாடும் வாய்ப்பு கிடைத்தது. பின்னர் அடுத்தடுத்து... காத்தவராயன், தெனாவட்டு, ஹரிதாஸ் போன்ற படங்களில் பாடும் வாய்ப்பு கிடைத்தாலும் இவருக்கான அங்கீகாரம் என்பது கிடைக்கவில்லை.
பின்னர் ரமணியம்மாள், கடந்த 2017 ஆம் ஆண்டு, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'சரிகமப', ரியாலிட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தன்னுடைய திறமையை வெளிப்படுத்தினார். 63 வயதில்.. ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்ட பழைய பாடல்கள், மற்றும் நாட்டுப்புற பாடல்களை பாடிய இவருக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. இந்த நிகழ்ச்சிக்கு பின்னர், அடுத்தடுத்து பல படங்களில் பின்னணி பாடகியாக மாறினார்.
46
அந்த வகையில், ஜூங்கா , சண்டக்கோழி 2, காப்பான், மற்றும் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா, போன்ற படங்களில் அடுத்தடுத்து பாடல்கள் பாடும் வாய்ப்பை பெற்றார்.
இவர் பாடுவதற்காக மேடை ஏறிவிட்டால், வெறித்தனமாக தன்னுடைய பாடலை வெளிப்படுத்துவார் எனவே நடுவர்கள் இவருக்கு வைத்த பெயர் தான் ராக் ஸ்டார். பின்னர் அதுவே அவரின் அடைமொழியாக மாறி ராக் ஸ்டார் ரமணியம்மாள் என அழைக்கப்பட்டார். 'சரிகமப' நிகழ்ச்சியில் இளம் போட்டியாளர்களுக்கு கடைசி வரை டஃப் கொடுத்து, டைட்டிலை கைப்பற்றியதோடு மிகப்பெரிய ரொக்க தொகையை பரிசாகவும் வென்றார்.
66
மேலும் ஜீ தமிழில் ஒளிபரப்பான 'யாரடி நீ மோகினி ' சீரியலில் ஒரு சிறு கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார். இந்நிலையில் திடீர் என ஏற்பட்ட உடல்நல குறைவு காரணமாக, ராக் ஸ்டார் ரமணியம்மாள் தன்னுடைய 69 வயதில் உயிரிழந்துள்ளார். இவரின் மரணம் ஒட்டு மொத்த இசை ரசிகர்கள் மற்றும் பிரபலங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.