ஆர்.ஆர்.ஆர் படத்தின் நாயகன் ராம்சரண், கடந்த 2012-ம் ஆண்டு பிரபல தொழிலதிபரின் மகளான உபாசனா என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகியும் இந்த ஜோடி குழந்தை பெற்றுக்கொள்ளாமல் இருந்து வந்தது.
25
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தான் கர்ப்பமாக இருக்கும் தகவலை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் ராம்சரணின் மனைவி உபாசனா. இதனால் உற்சாகம் அடைந்த ராம்சரணின் தந்தை சிரஞ்சீவி டுவிட்டர் வாயிலாக தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தார்.
35
சமீபத்திய பேட்டியில் தான் தாமதமாக குழந்தை பெற்றுக்கொள்வது குறித்து விளக்கம் அளித்திருந்த உபாசனா, இது ராம்சரணும், தானும் எடுத்த பரஸ்பர முடிவு தான் என்றும் கூறி இருந்தார்.
இந்நிலையில், உபாசனாவின் வளைகாப்பு நிகழ்வு துபாயில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் அவரது நண்பர்களும் நெருங்கிய உறவினர்களும் கலந்துகொண்டனர். அந்த வளைகாப்பு நிகழ்வின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
55
இந்த வளைகாப்பு நிகழ்விற்காக ராம்சரணின் மனைவி அணிந்திருந்த ஆடையின் விலை மட்டும் ரூ.1.5 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. இந்த புகைப்படங்களைப் பார்த்த நெட்டிசன்கள் அவருக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.