தெலுங்கு சூப்பர்ஸ்டார் சிரஞ்சீவியின் மகனான ராம்சரண், தற்போது டோலிவுட்டின் டாப் ஹீரோவாக வலம் வந்துகொண்டிருக்கிறார். ஆர்.ஆர்.ஆர் படத்தின் வெற்றிக்கு பின்னர் இவரின் மார்க்கெட் ஜெட் வேகத்தில் உயர்ந்துவிட்டது. தற்போது ஷங்கர் இயக்கத்தில் கேம் சேஞ்சர் எனும் பிரம்மாண்ட திரைப்படத்தில் நாயகனாக நடித்து வருகிறார் ராம்சரண். இதுதவிர உப்பென்னா படத்தின் இயக்குனரின் புதிய படத்திலும் நடிக்க கமிட் ஆகி உள்ளார்.
திருமணமாகி இவ்வளவு தாமதமாக குழந்தை பெற்றுக்கொள்ள அவர்கள் முடிவெடுத்தது ஏன் என்பது தான் பலரது கேள்வியாகவும் இருந்து வந்தது இதற்கு உபாசனா சமீபத்திய பேட்டியில் விளக்கம் கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : “மற்றவர்கள் விருப்பத்திற்காக அல்லாமல் நாங்கள் விரும்பும்போது குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என நாங்கள் முடிவெடுத்து அது நடந்துள்ளதால் நான் மிகவும் உற்சாகமாக உள்ளேன்.
திருமணமாகி 10 ஆண்டுகளுக்கு பின் நாங்கள் இந்த முடிவை எடுத்தது சிறப்பான ஒன்றாக கருதுகிறேன். ஏனெனில் தற்போது நாங்கள் இருவரும் வளர்ச்சியடைந்துவிட்டோம். பொருளாதார ரீதியாகவும் பாதுகாப்பாக இருக்கிறோம். இதுதான் சிறந்த நேரம். இது நாங்கள் இருவரும் எடுத்த பரஸ்பர முடிவு” என்று ராம்சரணின் மனைவி உபாசனா தெரிவித்துள்ளார். இந்த ஜோடி கடந்தாண்டு டிசம்பர் மாதம் தாங்கள் பெற்றோர் ஆக உள்ள தகவலை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... மினி கோடம்பாக்கமாக மாறிய சேப்பாக்கம்... சிஎஸ்கே மேட்சை பார்க்க இத்தனை சினிமா பிரபலங்கள் வந்திருந்தார்களா..!