பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஜான்வி கபூர். நடிகை ஸ்ரீதேவியின் மகளான இவர், தனது தாயைப் போலவே தற்போது தென்னிந்திய திரையுலகில் கலக்கத் தயாராகி வருகிறார். அண்மையில் தெலுங்கு படம் ஒன்றில் நடிக்க கமிட் ஆகி உள்ளார்.
26
பிரபல தெலுங்கு இயக்குனர் கொரட்டலா சிவா இயக்கும் அப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக நடித்து வருகிறார் ஜான்வி கபூர். தென்னிந்திய திரையுலகில் அவர் நடிக்கும் முதல் படம் இதுவாகும். இப்படத்திற்காக அவர் ரூ.5 கோடி வரை சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது.
36
இதுதவிர இந்தியில் மிஸ்டர் அண்ட் மிஸ்சஸ் மஹி என்கிற படத்திலும் ஜான்வி ஹீரோயினாக நடித்து வருகிறார். கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகும் படம் என்பதால் இதற்காக பிரத்யேகமாக கிரிக்கெட் பயிற்சி எடுத்து நடித்து வருகிறார் ஜான்வி.
நடிகை ஜான்வி கபூரின் தங்கை குஷி கபூரும் விரைவில் ஹீரோயினாக களமிறங்க உள்ளார். அவர் தமிழில் பிளாக்பஸ்டர் ஹிட் ஆன லவ் டுடே படத்தின் இந்தி ரீமேக்கில் அமீர்கானின் மகனுக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
56
நடிகை ஜான்வி கபூரும், குஷி கபூரும் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளனர். ஜான்வி, குஷி இருவரும் பாவடை தாவணி அணிந்து வந்து சாமி தரிசனம் செய்தபோது எடுத்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.
66
அதேபோல் நடிகை ஜான்வி கபூரின் காதலன் ஷிகார் பஹாரியாவும் உடன் சென்றிருந்தார். நேற்று ஷிகார் பஹாரியாவின் பிறந்தநாள் என்பதால் அதற்காக சாமி தரிசனம் செய்ய அவரை திருப்பதிக்கு அழைத்து சென்று இருக்கிறார் ஜான்வி கபூர்.