ஆர்.ஆர்.ஆர் (RRR)
ராஜமவுலி இயக்கிய ஆர்.ஆர்.ஆர் படத்திற்காக கீரவாணி இசையமைத்த நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது. இப்படத்தை ஜீ5 மற்றும் ஹாட்ஸ்டார் ஆகிய ஓடிடி தளங்களில் பார்க்கலாம்.
தி எலிபெண்ட் விஸ்பெரர்ஸ் (The Elephant Whisperers)
கார்த்திகி கோன்சால்வஸ் இயக்கத்தில் வெளியாகி ஆஸ்கர் விருது வென்ற தி எலிபெண்ட் விஸ்பெரர்ஸ் என்கிற இந்திய ஆவண குறும்படத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.
எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ் (Everything Everywhere All At Once)
95-வது ஆஸ்கர் விழாவில் 7 விருதுகளை வென்று குவித்த ‘எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்' என்கிற அமெரிக்க திரைப்படத்தை சோனி லிவ் ஓடிடி தளத்தில் கண்டுகளிக்கலாம்.
ஆல் கொயட் ஆன் தி வெஸ்டர்ன் பிரண்ட் (All Quiet On The Western Front)
ஆஸ்கர் விழாவில் ஆல் கொயட் ஆன் தி வெஸ்டர்ன் பிரண்ட் என்கிற ஜெர்மன் நாட்டு திரைப்படம் 4 விருதுகளை வென்று குவித்தது. இப்படம் தற்போது நெட்பிளிக்ஸில் ஸ்டிரீம் ஆகி வருகிறது.
அவதார் தி வே ஆஃப் வாட்டர் (Avatar The Way Of Water)
ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்தாண்டு வெளியாகி பிரம்மாண்ட வெற்றியை பெற்றதோடு ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த வி எஃப் எக்ஸிற்கான விருதை வென்ற அவதார் 2 படத்தை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், அமேசான் பிரைம், ஆப்பிள் டிவி மற்றும் வூட் ஆகிய நான்கு ஓடிடி தளங்களில் வருகிற மார்ச் 28-ந் தேதி முதல் பார்க்கலாம்.
டாப் கன் மேவ்ரிக் (TopGun Maverick)
டாம் குரூஸ் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்ற டாப் கன் மேவ்ரிக் திரைப்படம், ஆஸ்கரின் சிறந்த ஒலி வடிவமைப்புக்கான விருதை வென்றிருந்தது. இப்படத்தை அமேசான் பிரைமில் கண்டுகளிக்கலாம்.
பினாச்சியோ (Pinocchio)
சிறந்த அனிமேஷன் படத்துக்கான ஆஸ்கர் விருதை வென்ற பினாச்சியோ என்கிற திரைப்படத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம்.