ஜோதிகாவை விரட்டி விரட்டி காதலித்த வாரிசு நடிகர்..! சூர்யாவால் கைகூடாமல் போன லவ்!

First Published | Mar 14, 2023, 10:20 PM IST

நடிகை ஜோதிகாவுக்கு திருமணம் ஆவதற்கு முன்பு, பிரபல வாரிசு நடிகர் துரத்தி துரத்தி அவரை ஒருதலையாக காதலித்ததாக ஒரு தகவல் சமூக வலைத்தளத்தில் தீயாக பரவி வருகிறது.
 

தமிழ் திரையுலகில் நட்சத்திர ஜோடிகளாக வலம் வந்து கொண்டிருப்பவர்கள் சூர்யா - ஜோதிகா. இவர்கள் இருவரும் அடுத்துடாது சில படங்களில்  இணைந்து நடித்த போது, இருவருக்கும் ஏற்பட்ட நட்பு பின்னர் காதலாக மாறியது.

இருவரும் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்த நிலையில், முதலில் சூர்யா குடும்பத்தினர் இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், ஒரு வழியாக கடைசி வரை போராடி,  இரு குடும்பத்தினரின் சம்மதத்தையும் பெற்று, இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

ராஷ்மிகாவை கழட்டி விட்ட விஜய் தேவரகொண்டா... விவாகரத்தான நடிகையுடன் ஒரே ரூமில் கூத்தடிக்கிறாரா?
 

Tap to resize

Jyothika

சூர்யாவை, ஜோதிகா திருமணம் செய்து கொள்ள நடிகர் சிவகுமார் பல்வேறு நிபந்தனைகள் விதித்ததாக கூறப்பட்டது. அதற்கு ஏற்றாபோல் ஜோதிகாவும், திருமணம் ஆன பின்னர் திரை உலகில் இருந்து முழுமையாக விலகினார். இரு குழந்தைகள் பிறந்து வளர்ந்த பின்னரே, கடந்த 12015 ஆம் ஆண்டு, சூர்யா தயாரிப்பில் வெளியான '36 வயதினிலே' படத்தின் மூலம் மீண்டும் திரை உலகிற்கு ரீ-என்ட்ரி கொடுத்தார்.

ஆனால் மருமகள் ஜோதிகா, மீண்டும் நடிப்பது நடிகர் சிவகுமாருக்கு உடன்பாடு இல்லை என்றாலும், கணவர் சூர்யாவின் முழு சப்போர்ட் இருந்ததால், தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார் ஜோதிகா. இதை எடுத்து தற்போது பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வரும் ஜோதிகா, கடந்த இரண்டு மாதத்திற்கு முன்னர் மும்பையில் கணவர் மற்றும் குழந்தைகளோடு குடியேறிவிட்டதாக ஒரு தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

ஐஸ்வர்யாவை வேறொரு பெண்ணுக்காக ஏமாற்றினாரா தனுஷ்? நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த ரஜினிகாந்த் மகள்!
 

இது ஒரு புறம் இருக்க, திரையுலகில் நடிகை ஜோதிகாவுக்கு திருமணம் ஆவதற்கு முன்பு வாரிசு நடிகர் ஒருவர் துரத்தி துரத்தி ஒருதலையாக காதலித்ததாகவும், ஆனால் சூர்யா - ஜோதிகா இருவரும் காதலித்து வந்ததால், அவரின் எண்ணம் நிறைவேறவில்லை என ஒரு தகவல் சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.
 

அவர் வேறு யாரும் அல்ல, ஹன்சிகா, நயன்தாரா, போன்ற டாப் நடிகைகளை தன்னுடைய காதல் வலையில் சிக்க வைத்த சிம்பு தான். ஆனால் என்ன நேரமோ? இவர் காதலித்த நடிகைகளுக்கெல்லாம் திருமணம் முடிந்து விட்ட நிலையிலும், சிம்புக்கு மட்டும் தற்போது வரை திருமணம் கைகூடாமல் உள்ளது.

நயன்தாரா கூறிய வார்த்தை... ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை இழந்த பிரபல நடிகை.! புலம்பி தள்ளுறாங்களே

Manmadhan

சிம்புவுக்கு நடிகை ஜோதிகா மீது ஒருதலையாக காதல் இருந்ததாகவும், எனவே பிளான் போட்டு தான் இயக்கிய மன்மதன் படத்தில் அவரை நடிக்க வைத்தாராம். ஆனால் ஜோதிகா, சூர்யா மீது மிகவும் தீவிரமான காதலில் இருந்ததால்,  சிம்பு காதால் ஒருதலை காதலாகவே இருந்து அவரின் காதல் கைகூடாமல் போனதாக கூறப்படுகிறது.

Latest Videos

click me!