திருமணமாகி 10 ஆண்டுகளுக்கு பின் கர்ப்பமான மனைவி... அப்பா ஆகப்போகும் குஷியில் ஆர்.ஆர்.ஆர் நாயகன்

First Published | Dec 13, 2022, 8:40 AM IST

ராம்சரண் - உபாசனா ஜோடி, தாங்கள் இருவரும் விரைவில் பெற்றோர் ஆகவுள்ள தகவலை வெளியிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளனர். 

தெலுங்கு திரையுலகின் சூப்பர்ஸ்டாராக இருந்து வருபவர் சிரஞ்சீவி. இவரின் மகனான ராம்சரணும் தற்போது டோலிவுட்டில் முன்னணி கதாநாயகனாக வலம் வந்து கொண்டிருக்கிறார். ராம்சரணுக்கும் உபாசனா காமினேனி என்பவருக்கும் கடந்த 2012-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகியும் இவர்கள் இதுவரை குழந்தை பெற்றுக்கொள்ளவில்லை.

கடந்த சில மாதங்களுக்கு முன் அளித்த பேட்டி ஒன்றில் கூட தாங்கள் குழந்தை பெற்றுக்கொள்ளப்போவதில்லை என தடாலடியாக பேசி இருந்தார் ராம்சரணின் மனைவி. தாங்கள் இருவரும் தற்போது தங்களது இலக்கை நோக்கி நகர்ந்து வருவதாகவும், இந்த சமயத்தில் குழந்தை பெற்றுக்கொண்டால் இலக்கின் மீதான கவனம் சிதறிவிடும் என்பதனால் தற்போதைக்கு குழந்தை பெற்றுக்கொள்ளும் ஐடியா இல்லை என தெரிவித்து இருந்தார்.

இதையும் படியுங்கள்... மு.க.ஸ்டாலின் முதல் தனுஷ் வரை... பிறந்தநாளன்று வாழ்த்தியவர்களுக்கு லிஸ்ட் போட்டு நன்றி சொன்ன ரஜினிகாந்த்

Tap to resize

உபாசனாவின் இந்த பேட்டி மிகப்பெரிய அளவில் வைரல் ஆனது. இந்நிலையில், அந்த பேட்டி கொடுத்த ஐந்தே மாதத்தில் குட் நியூஸ் சொல்லி உள்ளது ராம்சரண் - உபாசனா ஜோடி. தாங்கள் இருவரும் விரைவில் பெற்றோர் ஆகவுள்ள தகவலை வெளியிட்டு இருவரும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளனர். 

தான் தாத்தா ஆகப்போவதால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கும் நடிகர் சிரஞ்சீவி, ஹனுமனின் ஆசியுடன் உபாசனாவும், ராம்சரணும் தங்களது முதல் குழந்தையை வரவேற்க உள்ளார்கள் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார் சிரஞ்சீவி. இதையடுத்து ராம்சரண் - உபாசனா ஜோடிக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

இதையும் படியுங்கள்... முத்துவேல் பாண்டியனாக கெத்து காட்டும் ரஜினிகாந்த் - பிறந்தநாள் பரிசாக வெளியானது ‘ஜெயிலர்’ கிளிம்ப்ஸ் வீடியோ

Latest Videos

click me!