ரசிகர்கள் கூட்டம் அதிகமானதை அடுத்து, வீட்டிற்கு வெளியே வந்து செய்தியாளர்களை சந்தித்த ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்த், அவர் ஊரில் இல்லை என்பதை கூறியதோடு, தயவுசெய்து ரசிகர்கள் யாரும் கொட்டும் மழையில் காத்திருக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டார். ரஜினியின் சார்பாக வந்திருந்த எல்லோருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக லதா கூறினார்.