Robo Shankar
1997-ஆம் ஆண்டு, 'தர்ம சக்கரம்' படத்தின் மூலம், திரைப்படங்களில் அறிமுகமாகி இருந்தாலும் விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு, அது இது எது போன்ற நிகழ்ச்சிகள் தான் ரோபோ ஷங்கருக்கு திருப்பு முனையாக அமைந்தது. இதையடுத்து, கூட்டத்தோடு கூட்டமாக சைட் ஆர்டிஸ்ட்டாக நடித்து வந்த ரோபோ ஷங்கர், ஹீரோவுடன் பயணிக்கும் விதமான... முக்கியமான குணசித்ர வேடம் மற்றும் காமெடி ரோல்களில் நடிக்க துவங்கினார்.
Indaraja Debut Bigil Movie
ரோபோ ஷங்கர் மட்டும் இன்றி, இவருடைய மனைவி பிரியங்காவும் சில படங்களில் நடித்துள்ளார். யூ டியூப் வீடியோவில் கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். அப்பா - அம்மா மட்டும் நடிகர்கள் அல்ல, ரோபோ ஷங்கரின் மகள் இந்திரஜாவும், தளபதி விஜய் நடிப்பில் வெளியான 'பிகில்' படத்தில் பாண்டியமா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து ஃபேமஸ் ஆனார்.
Indraja Shankar Blessed Boy Baby
இதை தொடர்ந்து விருமன் படத்தில் நடித்த இந்திரஜாவுக்கு.. காமெடி ரோலில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்த போதும், அதிரடியாக தான் காதலித்த மாமாவையே பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். இந்திராஜாவின் கணவர் கார்த்தி, தொழிலதிபராக இருப்பது மட்டும் இன்றி, விரைவில் இயக்குனராகவும் அறிமுகமாக உள்ளார். திருமணம் ஆனதுமே... குழந்தை பெற்றுக்கொள்வதை தள்ளி போட போவதில்லை, முடிந்த வரை விரைவாக குழந்தை பெற்றுக்கொள்ள உள்ளதாக அறிவித்தனர்.
சூப்பர் ஹிட் சீரியலில் இருந்து வெளியேறிய ஹீரோயின்; என்ன ஆச்சு?
Indraja and Karthik Couple Blessed Boy Baby
மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு.. இருவருமே திறமையை வெளிப்படுத்தி வந்த போது தான் இந்திரஜா கர்ப்பமானார். எனவே அதிரடியாக நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இந்திரஜாவுக்கு, அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளதாகவும், தாய் - சேய் இருவரும் நலமுடன் இருப்பதாக கூறப்டுகிறது. பேரன் பிறந்த சந்தோஷத்தில், ரோபோ ஷங்கரின் குடும்பம் துள்ளி குதித்து வருகிறதாம்.