பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின், இறுதிப் போட்டி முடிந்ததுமே சௌந்தர்யா தன்னுடைய காதலர் விஷ்ணுவை சந்தித்து எடுத்து கொண்ட போட்டோஸ் இப்போது வைரலாகி வருது.
விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வந்த பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது. இதில், முத்துக்குமரன் டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டார். அவருக்கு பிக் பாஸ் டிராபி கொடுக்கப்பட்டதோடு 40 லட்சத்து 50 ஆயிரம் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது.
26
Vijay sethupathi Host Bigg Boss
இவரு தான் டைட்டில் வின்னராக வருவார் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், சௌந்தர்யா 2ஆவது இடம் பிடித்தார். விஷால் 3ஆவது இடம் பிடித்தார். இந்த நிலையில் தான் பிக் பாஸ் ஃபைனல்ஸ் முடிஞ்சதும் வெளியில் வந்த சவுந்தர்யா, பெத்த அப்பா - அம்மாவை பார்ப்பதற்கு முன்பு தன்னுடைய காதலரான விஷ்ணுவை சந்தித்து லவ் மோடில் எடுத்துக்கிட்டு போட்டோஸ் இப்போ வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது .
பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி கடந்த ஆண்டு அக்டோபர் 6ஆம் தேதி தொடங்கியது. இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார். ஆரம்பத்தில் அவர் மீது விமர்சனம் எழுந்தாலும் , அதையெல்லாம், ஒரு பொருட்டாகவே எடுத்து கொள்ளாது விஜய் சேதுபதி தனது வேலையை சிறப்பாக செய்தார். பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை விஜய் சேதுபதி சிறப்பாக தொகுத்து வழங்கியதால் இனி வரும் சீசன்களிலும் விஜய் சேதுபதி தான் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
46
Muthukumaran Won Title
நேற்று நடைபெற்ற பிக்பாஸ் இறுதிப் போட்டியில், மொத்தம் 5 போட்டியாளர்கள் ஃபைனலிஸ்ட்டாக இருந்தனர். அதன்படி, முத்துக்குமரன், சௌந்தர்யா, விஷால், ரயான், மற்றும் பவித்ரா ஆகியோரில் யார் வெற்றி பெறுவார் என்கிற மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், அனைவரும் எதிர்பார்த்த போட்டியாளரான முத்து குமரன் தான் முதலிடத்தை பிடித்தார்.
இவரை தெடர்ந்து இரண்டாவது இடத்தை சௌந்தர்யாவும்... மூன்றாவது இடையை விஷாலும் பிடித்தனர். பிக்பாஸ் ஃபைனல் முடிந்த கையேடு சௌந்தர்யா வெளியிட்டுள்ள போட்டோ தான் இப்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடந்த ஃபிரீஸ் டாஸ்கின் போது வீட்டிற்குள் வந்த விஷ்ணுவிற்கு சர்ஃபரைஸ் கொடுக்கும் போது சௌந்தர்யா தனது காதலை வெளிப்படுத்தினார். அதற்கு விஷ்ணு என்ன பேசுவதென்று தெரியாமல் முதலில் நீ பிக் பாஸை முடித்துக் கொண்டு வெளியில் வா பார்த்துக் கொள்ளலாம் என்றார். எனினும் அவரை விடுவதாக இல்லை, கடைசியில் சௌந்தர்யாவின் காதலை ஏற்றுக் கொண்டார்.
66
Soundariya Nanjundan latest Photo
இப்போது சௌதர்யா பிக்பாஸ் முடிந்த கையேடு, விஷ்ணுவை சந்தித்துள்ளதால்... சௌதர்யாவிடம் நெட்டிசன்கள் இப்போதே டேட்டிங்கை ஆரம்பிச்சிடீங்களா? என கேள்வி எழுப்பி வருகிறார்கள். சௌந்தர்யா மீதான காதலை ஒப்புக்கொண்ட விஷ்ணு, இந்த ஆண்டுக்குள் திருமணம் செய்து கொள்வோம் என்றும், அதற்கு முன் கொஞ்ச நாள் காதலிக்க உள்ளதாக கூறி உள்ளது குறிப்பிடத்தக்கது.