விக்ரம் - ரவி மோகன் இடையே மோதல்; பரபரப்பாகும் கோலிவுட்!

First Published | Jan 20, 2025, 3:15 PM IST

பொன்னியின் செல்வனில் ஒன்றாக நடித்த சீயான் விக்ரமும், நடிகர் ரவி மோகனும் தற்போது பாக்ஸ் ஆபிஸ் மோதலில் இறங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Ravi Mohan, Vikram

நடிகர் விக்ரமும், நடிகர் ரவி மோகனும் நெருங்கிய நண்பர்கள். இவர்கள் இருவரும் மணிரத்னம் இயக்கிய மாஸ்டர் பீஸ் திரைப்படமான பொன்னியின் செல்வனில் இணைந்து நடித்திருந்தனர். அப்படத்தில் விக்ரம் ஆதித்த கரிகாலனாகவும், ஜெயம் ரவி பொன்னியின் செல்வனாகவும் நடித்திருந்தார். அப்படத்தின் வெற்றிக்கு பின்னர் விக்ரம் மற்றும் ரவி மோகன் ஆகியோர் சோலோ ஹீரோவாக நடித்த இரண்டு படங்கள் ஒரே நாளில் போட்டிபோட்டு ரிலீஸ் ஆக உள்ளன.

Veera Dheera Sooran vs Genie

அந்த வகையில் விக்ரம் நடிப்பில் தற்போது உருவாகி வரும் வீர தீர சூரன் படத்தின் இரண்டாம் பாகம் வருகிற மார்ச் மாதம் 28-ந் தேதி ரமலான் விடுமுறையை ஒட்டி ரிலீஸ் ஆக உள்ளதாம். அந்த ரிலீஸ் தேதியை ஜெயம் ரவி நடித்துள்ள ஃபேண்டஸி திரைப்படமான ஜீனியும் லாக் செய்து இருக்கிறதாம். இந்த இரண்டு படங்களுமே இந்த ஆண்டின் அதிக எதிர்பார்க்கப்படும் படங்களாகும். இவை ஒரே நாளில் ரிலீஸ் ஆவதால் பாக்ஸ் ஆபிஸில் கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்... நெக்ஸ்ட் லெவல்-னா என்ன? சந்தானம் வைக்கும் ட்விஸ்ட் இதுதான்!


Vikram Veera Dheera Sooran

விக்ரம் நடித்துள்ள வீர தீர சூரன் படத்தை சு அருண் குமார் இயக்கி உள்ளார். இப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடித்துள்ளார். இப்படத்தில் வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடித்திருக்கிறார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து உள்ளார். இதன் இரண்டாம் பாகத்தை தான் முதலில் ரிலீஸ் செய்ய உள்ளனர். அதைத்தொடர்ந்து முதல் பாகம் வெளியிடப்படுமாம். இந்த படம் பொங்கலுக்கே ரிலீஸ் ஆவதாக இருந்தது. விடாமுயற்சி ஏற்படுத்திய குழப்பத்தால் தற்போது மார்ச் மாதத்திற்கு தள்ளிப்போய் உள்ளது.

Ravi Mohan starrer Genie

அதேபோல் ரவி மோகன் நடித்துள்ள ஜீனி திரைப்படத்தை அர்ஜுனன் இயக்குகிறார். இவர் இயக்குனர் மிஷ்கினிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் ஆவார். இப்படத்தை வேல்ஸ் பிலிம் நிறுவனம் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார். இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கிறார். இப்படத்தில் நடிகர் ஜெயம் ரவிக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன், கீர்த்தி ஷெட்டி, வாமிகா கபி ஆகியோர் நடித்துள்ளனர்.

இதையும் படியுங்கள்... வீடியோ டெலிட் பண்ணா காசு தரேன்; யூடியூபரிடம் பேரம் பேசிய நயன்தாரா? கிளம்பிய புது சர்ச்சை

Latest Videos

click me!