தளபதி 69 கடைசி படம் இல்லயா? முடிவை மாற்றிய விஜய்: தளபதி 70 படம் உறுதி?

First Published | Jan 20, 2025, 1:20 PM IST

Vijay Next With Venkat Prabhu For Thalapathy 70 : தளபதி 69 தான் கடைசி படம் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் இப்போது தன்னுடைய முடிவை மாற்றி தளபதி 70 படத்திலும் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

Thalapathy Vijay Next Movie, Thalapathy 70 Movie

Vijay Next With Venkat Prabhu For Thalapathy 70 : சம்பளம் வாங்கும் நடிகர்களில் விஜய்யும் ஒருவர். இவருடைய சம்பளம் மட்டும் ரூ.200 கோடி. கடைசியாக விஜய் நடிப்பில் வந்த கோட் படத்திற்கு ரூ.200 கோடி சம்பளம் பெற்றுள்ளார். இப்போது அவரது நடிப்பில் தளபதி 69 படம் உருவாகி வருகிறது. தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய விஜய் வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் இருக்கும் சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி உள்ள நிலையில் தளபதி 69 தான் தன்னுடைய கடைசி படம். இனிமேல் நடிக்க மாட்டேன் என்று கூறியிருந்த நிலையில் இப்போது அவர் தனது முடிவை மாற்றியிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

Thalapathy Vijay, Bhagavanth Kesari, Thalapaty Vijay Next Movie

அதன்படி, தளபதி 69 படத்திற்கு பிறகு தளபதி 70 படத்திலும் நடிக்க இருக்கிறாராம். தளபதி 70 லியோ பார்ட் 2 படமாக கூட இருக்கலாம் என்றும் இல்லை இல்லை புதிய கதை என்றும் சொல்லப்படுகிறது. மேலும், வெங்கட் பிரபுவை கதை எழுத சொல்லியிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அவர் லியோ பார்ட் 2 படத்தில் நடிக்க வில்லையாம். மாறாக வெங்கட் பிரபு இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.


GOAT Collection, Thalapathy 69 Movie

எனினும் இது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் வெளிவரவில்லை என்றாலும் கூட இது விஜய் ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக அமைந்துள்ளது. அதோடு, இயக்குநர் ஹெச் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி 69 படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதத்திற்குள்ளாக முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தை அக்டோபர் மாதம் வெளியிட திட்டமிடப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தில் விஜய் உடன் இணைந்து பூஜா ஹெக்டே, பாபி தியோல், பிரகாஷ் ராஜ், கௌதம் மேனன், நரைன், பிரியாமணி, மமிதா பைஜூ, மோனிஷா பிளெஸி, வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் பலர் நடித்துள்ளனர். கேவிஎன் புரோடக்‌ஷன்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Leo Movie, Thalapathy 70

இதற்கு முன் விஜய் நடிப்பில் வந்த கோட் படம் உலகம் முழுவதும் வெளியாகி ரூ.455 கோடி வசூல் குவித்தது. இதே போன்று லியோ படம் கிட்டத்தட்ட ரூ.623 கோடி வசூல் குவித்துள்ளதாக சொல்லப்படுகிறது. தளபதி 69 படத்தின் படப்பிடிப்பு முடிந்து ஒரு மாத ஓய்விற்கு பிறகு விஜய் தளபதி 70 படத்தின் படப்பிடிப்பை தொடங்குவார் என்று தெரிகிறது. அதோடு, வரும் 2026 ஆம் ஆண்டு தேர்தலுக்குள் விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தளபதி 69 படத்தின் படப்பிடிப்பு முடிந்து ஒரு மாத ஓய்விற்கு பிறகு விஜய் தளபதி 70 படத்தின் படப்பிடிப்பை தொடங்குவார் என்று தெரிகிறது. அதோடு, வரும் 2026 ஆம் ஆண்டு தேர்தலுக்குள் விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Latest Videos

click me!