Theatre Release Movies on January 24
தமிழ் சினிமாவிற்கு கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் இந்த ஆண்டு பொங்கல் ரிலீஸ் படங்களில் ஒரு படம் மட்டும் மாபெரும் வெற்றியை ருசித்துள்ளது. அப்படம் தான் விஷாலின் மதகஜராஜா. அப்படத்தின் வெற்றியால் தியேட்டர் உரிமையாளர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டு வருகின்றனர். அப்படத்துடன் போட்டிபோட்டு ரிலீஸ் ஆன கேம் சேஞ்சர், நேசிப்பாயா ஆகிய படங்கள் படு தோல்வியை சந்தித்தன. பொங்கல் ரிலீஸ் படங்களின் ஆதிக்கத்தால் கடந்த வாரம் எந்த புதுப்படமும் ரிலீஸ் ஆகவில்லை. ஆனால் பொங்கலுக்கு அடுத்தபடியாக குடியரசு தினத்தன்று மூன்று நாட்கள் தொடர் விடுமுறை வருவதால் அரை டஜன் படங்கள் அன்று ரிலீஸ் ஆக உள்ளன. அந்த படங்களை பற்றி பார்க்கலாம்.
Kudumbasthan
குடும்பஸ்தன்
குட் நைட், லவ்வர் என கடந்த இரண்டு ஆண்டுகளாக அடுத்தடுத்து வெற்றிப்படங்களை கொடுத்து வரும் மணிகண்டன், அடுத்ததாக நாயகனாக நடித்துள்ள படம் குடும்பஸ்தன். இப்படத்தை ராஜேஸ்வரி காளிசாமி இயக்கி உள்ளார். இப்படம் வருகிற ஜனவரி 24ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது.
Kuzhanthaigal Munnetra Kazhagam
குழந்தைகள் முன்னேற்றக் கழகம்
ஷங்கர் தயாள் இயக்கத்தில் நகைச்சுவை நடிகர் யோகிபாபு கதையின் நாயகனாக நடித்துள்ள திரைப்படம் குழந்தைகள் முன்னேற்றக் கழகம். இப்படத்தை இயக்கிய ஷங்கர் தயாள் கடந்த ஆண்டு காலமானார். அவரின் மறைவுக்கு பின் இப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படம் ஜனவரி 24ந் தேதி ரிலீஸ் ஆகிறது.
Mr House Keeping
மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங்
யூடியூப்பர் ஹரி பாஸ்கர் ஹீரோவாக அறிமுகமாகும் படம் மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங், இப்படத்தை அருண் ரவீந்திரன் இயக்கி உள்ளார். இப்படத்தில் ஹரி பாஸ்கருக்கு ஜோடியாக பிக் பாஸ் புகழ் லாஸ்லியா நடித்துள்ளார். இப்படம் ஜனவரி 24ந் தேதி திரைக்கு வருகிறது.
Vallan
வல்லான்
சுந்தர் சி இயக்கிய மதகஜராஜா திரைப்படம் தற்போது தியேட்டரில் சக்கைப்போடு போட்டு வரும் நிலையில், வருகிற ஜனவரி 24ந் தேதி அவர் ஹீரோவாக நடித்த வல்லான் திரைப்படம் திரைக்கு வர உள்ளது. இப்படத்தை மணி சேயோன் இயக்கி உள்ளார். அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக இது உருவாகி உள்ளது.