Best Short Film for Children, Niharika V.K, Naveen N
Devayani Short Film Kaikuttai Rani Wins Award : நடிகை தேவயானி முதன்முறையாக இயக்கி தயாரித்துள்ள குறும்படம் 'கைக்குட்டை ராணி' ஜெய்ப்பூர் சர்வதேச திரைப்பட விழாவில் விருதை வென்றது. இசைஞானி இளையராஜா இசையில் பி. லெனின் படத்தொகுப்பில் உருவாகியுள்ள 'கைக்குட்டை ராணி' குழந்தைகளின் உணர்வுகளை பேசும் படமாக அமைந்துள்ளது. சினிமாவில் 30 ஆண்டுகளாக பல்வேறு மொழிகளில் சுமார் 100 படங்களில் நடித்துள்ள நடிகை தேவயானி முதன்முறையாக இயக்கி தயாரித்துள்ள குறும்படமான 'கைக்குட்டை ராணி' 17வது ஜெய்ப்பூர் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த குழந்தைகள் குறும்படத்திற்கான விருதை வென்றுள்ளது.
Devayani Short Film, Ilaiyaraaja, Handkerchief Queen
டி ஃபிலிம்ஸ் பேனரில் தேவயானி தயாரித்து, எழுதி, இயக்கியுள்ள 'கைக்குட்டை ராணி' திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்க, எடிட்டர் பி. லெனின் படத்தொகுப்பை கையாண்டுள்ளார். ராஜன் மிர்யாலா ஒளிப்பதிவையும், லட்சுமி நாராயாணன் ஏ.எஸ். ஒலி வடிவமைப்பையும் கையாண்டுள்ளனர். சுமார் 20 நிமிடங்கள் ஓடும் இந்த குறும்படம் குழந்தைகளின் உணர்வுகளை திரையில் சொல்கிறது. தாயை இழந்த, தந்தை வெளியூரில் பணிபுரியும் ஒரு பெண் குழந்தை எத்தகைய சிக்கல்களை சந்திக்கிறது என்பதை உணர்ச்சிப்பூர்வமாக இப்படம் வெளிப்படுத்தியுள்ளது.
Ulaga Cinema Baskaran, Devayani Directorial Debut
'கைக்குட்டை ராணி' குறும்படத்தை பார்த்த 17வது ஜெய்ப்பூர் சர்வதேச திரைப்பட விழா நடுவர் குழுவினர் குழந்தைகளுக்கான சிறந்த குறும்படத்திற்கான விருதுக்கு இந்த குறும்படத்தை தேர்ந்தெடுத்திருப்பதோடு தேவயானி மற்றும் குழுவினரை வெகுவாக பாராட்டினர்.
இது குறித்து பேசிய தேவயானி கூறியிருப்பதாவது: "எத்தனையோ படங்களில் நான் நடித்திருந்த போதிலும், முதன்முறையாக நான் இயக்கிய குறும்படம் சர்வதேச அளவில் விருது பெறுவது மிகுந்த மகிழ்ச்சையையும் பெருமையையும் அளிக்கிறது. இதில் பங்காற்றியுள்ள மூத்த கலைஞர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. இதர சர்வதேச திரைப்பட விழாக்களுக்கும் இப்படத்தை கொண்டு செல்லும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்," என்றார்.
Kaikuttai Rani, Actress Devayani, 17th Jaipur International Film Festival
'கைக்குட்டை ராணி' குறும்படத்தில் நிஹாரிகா வி.கே. மற்றும் நவீன் என் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சவுண்ட் எஃபெக்ட்ஸ் வடிவமைப்பு: சி., சேது, டிஐ கலரிஸ்ட்: ஆன்டனி பேபின் ஏ. இந்த குறும் படத்தை சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு கொண்டு செல்லும் பணியை உலக சினிமா பாஸ்கரன் ஏற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதே போன்று இயக்குநர் சீனு ராமசானி இயக்கிய கோழிப்பண்ணை செல்லத்துரை படத்திற்கு சிறந்த இயக்குநருக்கான விருது சீனு ராமசாமிக்கு வழங்கப்பட்டது. மேலும், சிறந்த திரைப்படம் என்ற விருதையும் ஜெய்ப்பூர் சர்வதேச திரைப்பட விழாவில் இந்தப் படம் வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.