Santhosh and Mounica Wedding
பிரபலங்கள் ஒருவருக்கொருவர் நட்பாகி பழகி பின்னர் காதலித்து திருமணம் செய்து கொள்ளும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தான் இப்போது, குணச்சித்திர நடிகை மொனிக்காவை, சன் டிவி சீரியல் ஹீரோவான சந்தோஷ் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
Sun Tv Serial hero Santhosh
தற்போது சன் டிவியில் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும், 'ரஞ்சனி' என்கிற தொடரில் நடித்து வருகிறார். இந்த சீரியல் துவங்கப்பட்ட சில மாதங்களிலேயே சின்னத்திரை ரசிகர்கள் மற்றும் இல்லத்தரசிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சீரியலில் ஹீரோயினாக, சிங்க பெண்ணே சீரியலில் நடித்த ஜீவிதா நடித்து வருகிறார்.
Lubber Panthu Actress Mounica
குடும்ப பின்னணியை கொண்ட, காதல் தொடராக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் ஒவ்வொரு வாரமும் டி.ஆர்.பி-யில் கெத்து காட்டி வருகிறது. பணக்கார வீடு பெண்ணாக இருந்தாலும், ஆடம்பரத்தை வெறுக்கும் ரஞ்சினி, ஒரு சாதாரண வீடு பையனை காதலிக்கிறார். அவருக்காக தான் ஒரு பணக்காரி இல்லை என்று நாடகமாடுகிறார். ஹீரோயின்... சுற்றி சுற்றி காதலுக்கும் ஒரு வித்தியாசமான கதைக்களத்தில் தான் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.
ஏழை, எளியோருக்கு உதவி செய்யும் அளவிற்கு என்னிடம் காசு இருக்கு : இது தான் ஆசீர்வாதம்; சாய் பல்லவி!
Celebrities Marriage
இந்நிலையில், இந்த சீரியலில் ஹீரோவான சந்தோஷ்... தன்னுடைய காதலியான நடிகை மௌனிகாவை கரம்பிடித்துள்ளார். மௌனிகா பிளாக் ஷீப் வீடியோஸ், மற்றும் கனா காணும் காலங்கள் போன்றவற்றில் நடித்து பிரபலமானவர். சமீபத்தில் அட்டகத்தி தினேஷ், ஹரீஷ் கல்யாண், ஸ்வாசிகா, போன்ற பலர் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற, 'லப்பர் பந்து' படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.
Wedding Photos Goes Viral
சந்தோஷ் - மௌனிகாவின் திருமண நிச்சயதார்த்தம், கடந்த அக்டோபர் மாதம் நடந்த நிலையில், இதை தொடர்ந்து இவர்களின் திருமணம் கேரள முறைப்படி நடந்து முடிந்துள்ளது. திருமணம் எளிமையாக நடந்தாலும், ரிசப்ஷன் கிராண்டாக நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து ரசிகர்கள் பலர், இந்த ஜோடிகளுக்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
12 ஆண்டுகளுக்கு முன் விஜய் கைவிட்ட படம்; தூசிதட்டி எடுக்கும் விஷால்!